எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான
விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக்
காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும்.
அவைகள் கொண்டாடப்பட்ட காலங்கள், அதன் தன்மைகள் பற்றிய குறிப்புகள் அவர்களது
இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது அவர்களது காலத்திய தொல்லியல் ஆய்வுகள்
மூலமாகவோ மற்றும் பயணக் குறிப்புகள் மூலமாகவோ கிடைக்கின்றன. பெரும்பாலும்
ஒரு ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அம்மக்களின் இலக்கியங்களை ஆராய்ந்து
பார்க்கின்ற பொழுது, கிடைக்கின்ற சான்றுகளே முதன்மையானதாகும்.
அதனடிப்படையில் தமிழகத்தில் சங்ககால
மக்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
சங்ககால நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களிலிருந்து ஆய்வு
செய்தல் தக்கது என்ற முறையில் அவற்றினுள்ளே புதையுண்டு கிடக்கின்ற, இன்று
நமது வாழ்விலிருந்து மறைந்து போயிருக்கின்ற சில விழாக்களின் தன்மைகள்
பற்றியும் இங்கே காணலாம்.
கார்த்திகை திருவிழா:
தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய
இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப்
பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைபிடித்தும் வருகிறோம்.
இவ்விழா பற்றிய குறிப்பை சங்ககால நூலான நற்றிணையில் கூறப்பட்டுள்ளது இங்கு
கவனிக்கத் தக்கதாகும். ஏனெனில் சங்ககால நூல்களில் முன்னதாக வைத்துப்
போற்றக்கூடிய நூல் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்விழாவானது கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவாகும். கார்த்திகை
விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை
“அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202). என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வீடுகளும்,
தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு
ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் ஒன்றும் நமக்கு சான்று பகர்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment