மருத்துவப்படிப்புக்காக,
இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு.
ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக்
கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் – GMAT, GATE, SAT போன்ற
தேர்வுகளைப் போல. பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம்
மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம்
தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.
அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக
மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன்
மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச்
சொல்வதன் மூலம், பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி
விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள், இதன் அடிப்படையில்தான்
நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு
குறித்து இத்தகைய அர்த்தமற்ற கூச்சல்களை எழுப்பி, பெரும்பாலானவர்களை
நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப
வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச்
செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க,
இது மிகமிக அவசரமானத் தேவை.
நுழைவுத்
தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற
மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில்
நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத்
திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன்
அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது?. கிராமப்புறப் பள்ளிகள்
தரமற்றவை என்னும் அர்த்தத்திலா?, அவ்வாறெனில் அவற்றின் தரத்தை
உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க
முடியும்?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment