தமிழகத்தின் மக்களாட்சி மக்களின் ஆட்சியா?
உலகில் அரசு தோன்றிய நாட்களிலிருந்து
இன்று வரை அமைந்த அரசு அமைப்புகளிலே, மக்களாட்சி முறை தான் சிறப்பானதாகக்
கருதப்படுகிறது 1970 ஆம் ஆண்டுகளில், நாற்பது நாடுகளில் மட்டும்
பின்பற்றப்பட்ட மக்களாட்சி, முறை இன்று நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட
நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படாத நாடுகளில்
வாழும் மக்களும் மக்களாட்சி முறைக்கு மாறிவிடவே விரும்புகின்றனர். இன்று பல
நாடுகளில் அதற்கான போராட்டங்களும் நடந்து வருகின்றன. சுதந்திரம்
அடைந்ததிலிருந்து நம் நாட்டிலும் மக்களாட்சி முறையைத்தான் பின்பற்றி
வருகிறோம்.
மக்களுக்கான அரசு, மக்களாலே
தேர்ந்தெடுக்கப்பட்டு, நடத்தப்படுவது தான் மக்களாட்சியின் சிறப்பு. ஆனால்
நடைமுறையில் நமது மக்களாட்சி அப்படி செயல்படுவது இல்லை. மக்களாட்சியில்
மக்களாகிய நாம் தான் முதன்மையானவர்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் கையில்
கிடைத்தவுடன் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு விரோதமாகவே அரசாங்கங்கள்
செயல்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசு மக்களுக்காக
செயல்படுவது அரிதாகிவிட்டது. தவறான அதிகார பிரயோகம், ஊழல், நிர்வாக
திறமையின்மை போன்றவை தலை தூக்குகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment