Tuesday, 24 May 2016

தாலாட்டுப் பாடுங்கள்


thaalaattu3
அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு அருகி வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அழுகின்ற குழந்தைக்கு கணினியில் குழந்தைகள் பாடல் நாம் காண்பித்தாலும், நாம் நம் நாவினை அசைத்துப் பாடும் தாலாட்டுப் போல் சிறப்பாக இருக்காது. “தால்” என்றால் நாக்கு “ஆட்டுதல்” என்பது அசைத்தல், நாவினை அசைத்துப்  பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது என்று கூறுவர். அதே போன்று தால் என்றால் தொட்டில் என்றும்  பொருள்படும். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடுவதால் தாலாட்டுப் பாடல் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்று பிரித்து பாடும் வகையும், இருபாலருக்கும் ஒரே தாலாட்டு பாடும் மரபும் உண்டு. ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த பாடல்களையும், பெண் குழந்தைக்கு மென்மையான பாடல்களையும் வைத்துள்ளனர் என்ற போதும் இன்றைக்கு சூழலில் இருபாலருக்கும் ஒரே தாலாட்டுப் பாடலை படுவதே  இளமையிலிருந்தே சமத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டுச் செல்லும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 23 May 2016

பொருளாதாரம்


porulaadhaaram1
ஒரு நாடு எதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுமானால், முதலில் மக்கள் நலம் தான் சிறந்த பதிலாக பெறப்படும். மக்கள் நலத்திற்குள் கல்வி, மருத்துவம், அனைவருக்கும் உணவு, வசிப்பிடம், நல்ல குடிநீர் மற்றும் இன்ன பிற பொதுவான அடிப்படை வசதிகள்  என அனைத்தும் அடக்கம். ஆனால் பெரும்பாலான நாடுகளில் தன்னிறைவு என்றவுடன், “நாட்டு வளர்ச்சியை அதாவது பண மதிப்பை மட்டுமே வானளவு உயர்த்துவது” என தவறான மனக்கணக்கு போக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி என்பதே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

நம் நாடு ஒரு வளர்ந்து வரும் நாடு, அதே போல் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி விகிதம் தொழில்துறையின் மூலமும், அந்நிய செலாவணி மூலமும் நிலைநிறுத்தப்பட்டு வளர்ந்துகொண்டே வருகிறது. இம்மாதிரியான காரணத்தால் தொழில்துறையிலும், தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி அரங்கேறுகிறது. இது பாராட்டத்தக்க விடயம் தான். ஆனால் வேளாண் துறை சார்ந்த விளை நிலங்கள் அவைகளுக்கு இரையாக்கப்படுவது தான் மாபெரும் துயரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை


nota3
NOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எந்த கட்சிக்கோ வாக்காளருக்கோ வாக்களிக்க விரும்பாவிடில் தன்விருப்பமின்மையை தெரிவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது இந்த நோட்டா என்னும் தேர்வு.


2009ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, 2013ம் ஆண்டு முதல் வாக்கு எந்திரத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 May 2016

முள்ளிவாய்க்கால் இன்னும் விடிவில்லை!(கவிதை)


mullivaaikkaal1
சிங்களத்தின்
அதர்ம வெறித்தாண்டவத்தின்
நீண்ட தொடர்ச்சியாய்-
எம் இனத்தை
அடக்கி ஒடிக்கி
முடமாக்கி
குருடாக்கி
செவிடாக்கி
கொன்று தின்று புதைத்து

பைத்தியமாக்கி நடைப்பிணங்களாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20584

இலக்கியங்களில் பெண்ணியம்


ilakkiyaththil-2
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”   என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”
என்றும் பெண்மையின் குணநலன்களை உரைக்கிறது தொல்காப்பியம். இத்தகைய பெண்களைப் பாடாத புலவர்களும் இல்லை, படைப்பாளர்களும் இல்லை, படைப்புகளும் இல்லை எனலாம். கவிதையையும் கற்பனையையும் பிரிக்க முடியாதது போல, பெண்களையும் படைப்புகளையும் பிரிப்பதென்பது அரிது.

பாராட்டுவதற்காகவோ, துணிச்சலுடனோ, வருணனைக்காகவோ, போராடுபவளாகவோ, பரிதாபத்திற்குரியவளாகவோ, ஏதோ ஒரு விதத்தில் அந்தந்த படைப்பாளர் வாழும் சமுதாய சூழ்நிலைக்கேற்ப பெண் இலக்கியத்தில் கையாளப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் பெண்ணியம்

சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 18 May 2016

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்


3- Main Picture-Saathu vazhi
பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது எனநாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

என்ன செய்யப் போகிறோம்?


genetic6
எனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் இது வெறும் பூ மட்டும் தான் பூக்கும் காய்க்காது என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அடுத்து ஒரு பவளமல்லிச் செடியை எடுத்தேன். இதுவும் பூ மட்டும் தான் பூக்கும் விதையே வராது என்றார். ஏன் இப்படி என்று கேட்டேன். மக்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள் மேல் பழியைப் போட்டார்.

இத்தகைய பரிசோதனை செடிகளில் மட்டுமல்ல விலங்குகளிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியும். ஆயினும் இதை எப்படி எடுத்துக் கொள்வது? வெறும் ஆராய்ச்சி என்றோ இரசனை என்றோ மட்டும் இதை ஒதுக்கி விட முடியுமா?. பல்லுயிர்த் தன்மையை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மை ஆக்கும் செயலையும், இதற்குப்பின் ஒளிந்திருக்கும் பெருவணிக அரசியலையும் உற்று நோக்க வேண்டியுள்ளதும் அல்லவா?.


நாம் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ வணிக வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு எந்த உடை உடுத்த வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்?, எங்கு படிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்பது வரை எல்லாமே நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. நிறுவனர்களுக்கு நாமே ஒரு பண்டம் தான். அவர்களைப் பொருத்த வரையில் வாங்குபவர்கள் விற்பவர்கள் என்ற இரண்டு பிரிவு தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.