Wednesday, 18 May 2016

என்ன செய்யப் போகிறோம்?


genetic6
எனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் இது வெறும் பூ மட்டும் தான் பூக்கும் காய்க்காது என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அடுத்து ஒரு பவளமல்லிச் செடியை எடுத்தேன். இதுவும் பூ மட்டும் தான் பூக்கும் விதையே வராது என்றார். ஏன் இப்படி என்று கேட்டேன். மக்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள் மேல் பழியைப் போட்டார்.

இத்தகைய பரிசோதனை செடிகளில் மட்டுமல்ல விலங்குகளிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியும். ஆயினும் இதை எப்படி எடுத்துக் கொள்வது? வெறும் ஆராய்ச்சி என்றோ இரசனை என்றோ மட்டும் இதை ஒதுக்கி விட முடியுமா?. பல்லுயிர்த் தன்மையை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மை ஆக்கும் செயலையும், இதற்குப்பின் ஒளிந்திருக்கும் பெருவணிக அரசியலையும் உற்று நோக்க வேண்டியுள்ளதும் அல்லவா?.


நாம் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ வணிக வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு எந்த உடை உடுத்த வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்?, எங்கு படிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்பது வரை எல்லாமே நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. நிறுவனர்களுக்கு நாமே ஒரு பண்டம் தான். அவர்களைப் பொருத்த வரையில் வாங்குபவர்கள் விற்பவர்கள் என்ற இரண்டு பிரிவு தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment