பண்டைக்காலத்தில்
“வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத்
தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில்
தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள்
வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது
எனநாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம்
தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும்
அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய
வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway
67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே
அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான
பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக
இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள்
குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக்
கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின்
ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது
இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி
இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று,
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment