ஒரு
நாடு எதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுமானால்,
முதலில் மக்கள் நலம் தான் சிறந்த பதிலாக பெறப்படும். மக்கள் நலத்திற்குள்
கல்வி, மருத்துவம், அனைவருக்கும் உணவு, வசிப்பிடம், நல்ல குடிநீர் மற்றும்
இன்ன பிற பொதுவான அடிப்படை வசதிகள் என அனைத்தும் அடக்கம். ஆனால்
பெரும்பாலான நாடுகளில் தன்னிறைவு என்றவுடன், “நாட்டு வளர்ச்சியை அதாவது பண
மதிப்பை மட்டுமே வானளவு உயர்த்துவது” என தவறான மனக்கணக்கு போக்கு
நடைமுறையில் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி என்பதே அந்நாட்டு
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில்தான் இருக்கிறது என்பதை யாரும்
மறந்துவிடக்கூடாது.
நம் நாடு ஒரு வளர்ந்து வரும் நாடு, அதே
போல் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி விகிதம் தொழில்துறையின் மூலமும், அந்நிய
செலாவணி மூலமும் நிலைநிறுத்தப்பட்டு வளர்ந்துகொண்டே வருகிறது. இம்மாதிரியான
காரணத்தால் தொழில்துறையிலும், தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி
அரங்கேறுகிறது. இது பாராட்டத்தக்க விடயம் தான். ஆனால் வேளாண் துறை சார்ந்த
விளை நிலங்கள் அவைகளுக்கு இரையாக்கப்படுவது தான் மாபெரும் துயரம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment