Tuesday, 10 January 2017

பெண் விடுதலையும், அதன் அரசியலும்


siragu-pennukku-edhiraana1

நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், பெண்களின் நிலைமை முழுதும் சீரடையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாமும் பல ஆண்டுகளாக பெண் விடுதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்னே, பெண்களை மேலே வரவிடாமல், அழுத்தி, மண்ணுக்குள் புதைக்கும் ஆணாதிக்க அரசியல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.!


அதுவும் சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் முதலில் பலியாவது பெண்கள் தான். பெண்களுக்கு படிப்பு ஒரு அரண் என்று சொல்லி படிக்க வைக்கிறோம். ஆனால் அந்த படிப்பு கூட பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பது தான் ஒப்புக்கொள்ள வேண்டிய வருந்தத்தக்க உண்மை.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 9 January 2017

ஆரிய திராவிட கிரகணம் – ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு)


siragu-jallikattu

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் மாதிரி இது என்ன புதிதா ஆரிய திராவிட கிரகணம் என்று கேட்கிறீர்களா? கிரகணத்தன்று சூரியனும் நிலாவும் ஓரே நேர்கோட்டில் வருவது போன்று ஆரிய கொள்கைகள் கொண்டவர்களும் திராவிட கொள்கைகள் கொண்டவர்களும் ஒரே நேர்கோட்டில் செயல்படும் சூழ்நிலைகள் தான் ஆரிய திராவிட கிரகணம். அவ்வப்போது நடக்கும் இந்த மறைமுக நிகழ்வு தற்போது ஜல்லிக்கட்டை ஒட்டி வெட்ட வெளி மைதானத்திற்கு வந்திருக்கின்றது.


இங்கு ஆரியம் என்று பொதுவாக ஒரு சாதியினரை குறிப்பிடவில்லை. உழைத்தது சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு செல்வம் கொண்டு பொழுதுபோக பொது வாழ்க்கை வாழ்பவர்களில் சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேன். அவர்கள் இலங்கை, பாலஸ்தீன், ஆப்பிரிக்கா என்று உலகில் இருக்கும் அத்தனை மனிதர்கள் படும் துன்பங்களை எல்லாம் போராடி வழக்குகள் வாதாடி முழுமையாக தீர்த்து விட்டதால் மீதம் இருக்கும் பொழுதுகளை விலங்குகளை காக்க களமிறங்கி இருக்கும் பணக்கார பார்ப்பனர்ககளை மட்டுமே இங்கு ஆரியம் என்று குறிப்பிடுகிறேன். இந்த பணக்கார பார்ப்பனர்களுக்கு உழைக்கும் மக்கள் எல்லோரும் இன்னும் நாகரீகம் அடையாதவர்கள். உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் காட்டு மிராண்டித்தனம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 8 January 2017

தலையங்கம்


siragu-demonetization1

உலக நாடுகளில் இன்றைய இந்தியா மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்டது. 1947-க்குபின் ஆங்கிலேயரால் இந்தியா என்று அழைக்கப்பட்ட இந்நாடு 1947-க்குமுன் பல நாடுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனி பண்பாடு, மொழி, உடை, உணவு மற்றும் வாழ்வுமுறை இருந்து வந்தது. இந்திய ஒருங்கிணையம் ஒரு நாடாக இருந்தாலும், இன்றும் பல தேசிய இனங்களைக்கொண்ட ஒருங்கிணையமாகத்தான் இருந்து வருகிறது. வட இந்தியரையும் தென்னிந்தியரையும் பார்த்தாலே இது தெரியும். மிகப் பழமையானதொரு நாட்டின் பழக்க வழக்கங்களை ஒரு நாளில் மாற்றுவது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம். பலநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதாரத்தை மேற்கத்திய பொருளாதாரமாக மாற்றுவது மிக எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் சிந்தித்து சிறிது சிறிதாக செயல்படுத்துவதுதான் உகந்தது. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் அவசரகதியில் ஒரு முடிவை எடுத்து, நேர அவகாசமேதும் கொடுக்காமல் ஒரு முக்கிய முடிவை மக்களின்மேல் திணித்துள்ளார்கள்.


இந்தியா போன்ற பழம்பெரும்நாடுகளின் பொருளாதாரம் 80 விழுக்காட்டிற்குமேல் பணத்தினால்தான். இன்றும் இந்தியாவில் மின் வசதி, இணைய வசதி, சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் பல உள்ளன, நாட்டு நடப்புகள் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள் கோடிக்கணக்கினர். இந்த நிலையில் இந்தியத் தலைமையமைச்சர் ஓரிரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி இன்னும் சிலமணி நேரத்தில் இந்தியாவில் புழங்கும் 86% பணம் செல்லாது என்று அறிவிப்பது முட்டாள்தனத்திலே முட்டாள்தனமானது. பல கிராம மக்களுக்கு இது குறித்து எந்த அறிவிப்புமில்லாமல் இந்த முட்டாள்தன முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 5 January 2017

பிள்ளை மொழிக்கு ஆராரோ!(கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1

அமுதம் சிந்தும் பிள்ளைத் தமிழே
அமிழ்தாய் இனிக்கும் மழழை மொழியே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ
மழலை மொழியின் உரைநடை கவியே
மாதவர் போற்றும் கன்னித் தமிழினமே
ஆராரோ பாடுவாயோ ஆரிரோ பாடுவாயோ

காப்பனிந்த பருவம் முதலேநீ பிதற்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 4 January 2017

அமுதசுரபி (சிறுகதை)


siragu-amuthasurabi2

ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள் இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும் பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள் தருகிறோம் என்ற பெருமிதத்துடன் இருந்துவந்தது. ஒருநாள் கனிநாவலைப் பார்த்து மொட்டைநாவல் ஏளனமாகச் சிரித்தபடி “நீ தரும் கனிகளைப் பறிப்பதற்காக மனிதர்கள் உன்னைப்பிடித்து உலுப்புகிறார்கள்! உன் கொப்புகளை வளைக்கிறார்கள்! நீ உறுப்புகளை இழந்து கொண்டிருக்கிறாய்! இந்தநிலை நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய்!”–என்றது. அதற்குக் கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம்! அவ்வாறு கொடுப்பதால் எனக்கு நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்!”என்றது.


நாட்கள் நகர்ந்தன. ஒரு மூன்றுவருடங்கள் ஆகியிருக்கும். கனிநாவல் மேலும் கிளைகள் விட்டு ஒருவிருட்சம் போன்று பெரிதாக ஓங்கி வளர்ந்து நின்றது. மொட்டைநாவலோ வளர்ச்சிகுன்றி நலிவடைந்து தனது பொலிவை இழந்து நின்றது. அதற்கு ஆச்சரியம். நான் யாருக்கும் கனிகள் தரவில்லை, யாரும் என்னைப்பிடித்து உலுப்பியதில்லை, என்கொப்புகளை வளைத்ததுமில்லை, ஏன் பறவைகள்கூட என்னை அதிகம் அண்டியதில்லை, அப்படி இருக்கும்போது எனதுசக்தி முழுவதும் எனக்குத்தானே பயன்பட்டிருக்க வேண்டும்? நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும்? ஆனால் கனிநாவல் வளர்ந்தது எப்படி? இந்தக்கேள்வி மனத்தில் எழ அது கனிநாவலிடம் கேட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 3 January 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6


(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை)
கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:
“கண்டகி ஆற்றின் கரையில் இருக்கும் சித்திரவனத்தில் என் நண்பனாகிய எலி அரசன் இரண்யகன் என்பவன் இருக்கிறான். அவன் நமது வலையை அறுப்பான், அங்கே செல்லுங்கள்.”
இதைக் கேட்டுப் புறாக்கூட்டம் பறந்துசென்று எலி அரசன் வளையருகில் இறங்கியது. தனக்கு எவ்வழியிலும் ஆபத்து நேரிடலாம் என்று வளைக்கு நூறு வழிகள் செய்து வைத்திருக்கும் எலியரசன், புறாக்கள் இறங்கிய ஒலியைக் கேட்டு பயந்து உள்ளேயே இருந்தது.
சித்திரக்கிரீவன் (புறா அரசன்): இரண்யகா, நண்பா! எங்களோடு ஏன் பேசவில்லை?
தன் நண்பன் குரலைக் கேட்ட எலியரசன் வளையிலிருந்து வெளிவந்தது.

siragu-panja-thandhiram-story6-1

இரண்யகன்: நான் மிகவும் புண்ணியம் செய்தவன். ஆகவே சித்திரக்கிரீவன் ஆகிய என் நண்பன் என் வீட்டுக்கு வந்தான். இவ்வுலகத்தில் மனம் ஒத்த நண்பர்களோடு பழகுவதைவிட வேறு ஆனந்தம் ஏது?
பறவைகளின் துன்பத்தை அது நோக்கியது.
இரண்யகன்: நண்பா, நீ எல்லாரைக் காட்டிலும் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே, உனக்கு இப்படிப்பட்ட சோதனை எப்படி ஏற்பட்டது?

சித்திரக்கிரீவன்: எந்தக் காலத்தில் எது நடக்குமோ அது நடக்கும். விதி வலியது. அதற்கு முன் எந்த உபாயம் வெல்லும்? கடல் பெருகி மேலிட்டு வந்தால் அதற்குக் கரை ஏது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 January 2017

திருமண வயது எட்டாத பெண்களின் திருமணங்கள் – ஒரு பார்வை


child-marriage-4

இந்தியா போன்று குழந்தைத் திருமணம் அதிகளவில் நடைபெறும் நாடுகளில், அதனைத் தடுக்க திருமணம் செய்து கொள்ளும் இருபாலருக்கும் சட்டப்படி திருமண வயதாகவில்லை எனின் அந்தத் திருமணம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் எப்போதும் உண்டு. பெரும்பாலான சமயங்களில் பெண்ணுக்கு 18 வயதாகவில்லை எனின் அந்தத் திருமணத்தை செல்லாத திருமணம் (void marriage) என நீதிமன்றங்கள் அறிவிப்பதில்லை. மாறாக விலக்கத்தக்க (voidable marriages) என்றே நீதிமன்றங்கள் கருதுகின்றது. அப்படி நடந்திடும் திருமணங்களில் அந்தக் குழந்தைத் திருமணத்தில் சம்மந்தப்பட்ட மணமகன் அந்தப் பெண்ணின்  இயற்கை பாதுகாவலராக இருக்க முடியாது. Hindu Minority and Guardianship Act 1956 6(c) இன் படி திருமண வயது வராத மணப்பெண்ணின் கணவன் இயற்கை பாதுகாவலர் என்று இருந்தாலும் Prohibition Of Child Marriage Act 2006 என்ற சட்டத்தின் படி மேலே சொல்லப்பட்ட 6(c) எனும் சட்டம் செல்லத்தக்கதல்ல.


ஒரு பெண் திருமண வயது வரும் முன்னர் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்கள் மகளை மீட்டுக்கொடுக்கக் கூறுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், நீதிமன்றம் என்ன செய்யும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24893