நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள்
ஆகியும், பெண்களின் நிலைமை முழுதும் சீரடையவில்லை என்பதுதான் நிதர்சனமான
உண்மை. நாமும் பல ஆண்டுகளாக பெண் விடுதலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்,
எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்னே, பெண்களை மேலே வரவிடாமல்,
அழுத்தி, மண்ணுக்குள் புதைக்கும் ஆணாதிக்க அரசியல் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.!
அதுவும் சமீபகாலமாக பெண்களின் பாதுகாப்பு
மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும்
முதலில் பலியாவது பெண்கள் தான். பெண்களுக்கு படிப்பு ஒரு அரண் என்று சொல்லி
படிக்க வைக்கிறோம். ஆனால் அந்த படிப்பு கூட பொருளாதார ரீதியாகவும், சமூக
ரீதியாகவும் முழுமையான விடுதலையைப் பெற்றுத்தரவில்லை என்பது தான்
ஒப்புக்கொள்ள வேண்டிய வருந்தத்தக்க உண்மை.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment