ஒருஊரின் நடுவே இரண்டு நாவல்மரங்கள்
இருந்தன. ஒன்று கனிதரும் மரமாக (கனிநாவல்) இருந்தது. மற்றொன்று கனிதராத
மரமாக (மொட்டைநாவல்) இருந்தது. கனிநாவலின் பழங்களை ஊர்மக்கள் அனைவரும்
பெற்று உண்டுமகிழ்ந்தார்கள். அம்மரமும் அனைவருக்கும் உண்ணக்கனிகள்
தருகிறோம் என்ற பெருமிதத்துடன் இருந்துவந்தது. ஒருநாள் கனிநாவலைப் பார்த்து
மொட்டைநாவல் ஏளனமாகச் சிரித்தபடி “நீ தரும் கனிகளைப் பறிப்பதற்காக
மனிதர்கள் உன்னைப்பிடித்து உலுப்புகிறார்கள்! உன் கொப்புகளை
வளைக்கிறார்கள்! நீ உறுப்புகளை இழந்து கொண்டிருக்கிறாய்! இந்தநிலை
நீடித்தால் விரைவில் நீ நலிவடைந்து வீழ்ந்துவிடுவாய்!”–என்றது. அதற்குக்
கனிநாவல் “பிறருக்குக் கொடுப்பது நல்லவிசயம்! அவ்வாறு கொடுப்பதால் எனக்கு
நலிவு ஏற்படும் என்றால் அதை நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன்!”என்றது.
நாட்கள் நகர்ந்தன. ஒரு மூன்றுவருடங்கள்
ஆகியிருக்கும். கனிநாவல் மேலும் கிளைகள் விட்டு ஒருவிருட்சம் போன்று
பெரிதாக ஓங்கி வளர்ந்து நின்றது. மொட்டைநாவலோ வளர்ச்சிகுன்றி நலிவடைந்து
தனது பொலிவை இழந்து நின்றது. அதற்கு ஆச்சரியம். நான் யாருக்கும் கனிகள்
தரவில்லை, யாரும் என்னைப்பிடித்து உலுப்பியதில்லை, என்கொப்புகளை
வளைத்ததுமில்லை, ஏன் பறவைகள்கூட என்னை அதிகம் அண்டியதில்லை, அப்படி
இருக்கும்போது எனதுசக்தி முழுவதும் எனக்குத்தானே பயன்பட்டிருக்க வேண்டும்?
நான் தானே விருட்சம் போன்று ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும்? ஆனால் கனிநாவல்
வளர்ந்தது எப்படி? இந்தக்கேள்வி மனத்தில் எழ அது கனிநாவலிடம் கேட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment