உலக நாடுகளில் இன்றைய இந்தியா மிகப்
பழமையான நாகரீகத்தைக் கொண்டது. 1947-க்குபின் ஆங்கிலேயரால் இந்தியா என்று
அழைக்கப்பட்ட இந்நாடு 1947-க்குமுன் பல நாடுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு
நாட்டிற்கும் தனி பண்பாடு, மொழி, உடை, உணவு மற்றும் வாழ்வுமுறை இருந்து
வந்தது. இந்திய ஒருங்கிணையம் ஒரு நாடாக இருந்தாலும், இன்றும் பல தேசிய
இனங்களைக்கொண்ட ஒருங்கிணையமாகத்தான் இருந்து வருகிறது. வட இந்தியரையும்
தென்னிந்தியரையும் பார்த்தாலே இது தெரியும். மிகப் பழமையானதொரு நாட்டின்
பழக்க வழக்கங்களை ஒரு நாளில் மாற்றுவது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம்.
பலநூறு ஆண்டுகளாக இருந்து வரும் பொருளாதாரத்தை மேற்கத்திய பொருளாதாரமாக
மாற்றுவது மிக எச்சரிக்கையாகவும், பொறுமையாகவும் சிந்தித்து சிறிது சிறிதாக
செயல்படுத்துவதுதான் உகந்தது. ஆனால் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள்
அவசரகதியில் ஒரு முடிவை எடுத்து, நேர அவகாசமேதும் கொடுக்காமல் ஒரு முக்கிய
முடிவை மக்களின்மேல் திணித்துள்ளார்கள்.
இந்தியா போன்ற பழம்பெரும்நாடுகளின்
பொருளாதாரம் 80 விழுக்காட்டிற்குமேல் பணத்தினால்தான். இன்றும் இந்தியாவில்
மின் வசதி, இணைய வசதி, சாலை வசதிகளே இல்லாத கிராமங்கள் பல உள்ளன, நாட்டு
நடப்புகள் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள் கோடிக்கணக்கினர். இந்த நிலையில்
இந்தியத் தலைமையமைச்சர் ஓரிரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி
இன்னும் சிலமணி நேரத்தில் இந்தியாவில் புழங்கும் 86% பணம் செல்லாது என்று
அறிவிப்பது முட்டாள்தனத்திலே முட்டாள்தனமானது. பல கிராம மக்களுக்கு இது
குறித்து எந்த அறிவிப்புமில்லாமல் இந்த முட்டாள்தன முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment