(சித்திரக்கிரீவன் என்னும் புறாவின் கதை)
கொஞ்ச தூரம் பறந்தபிறகு புறா அரசன் தன் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:
“கண்டகி ஆற்றின் கரையில் இருக்கும்
சித்திரவனத்தில் என் நண்பனாகிய எலி அரசன் இரண்யகன் என்பவன் இருக்கிறான்.
அவன் நமது வலையை அறுப்பான், அங்கே செல்லுங்கள்.”
இதைக் கேட்டுப் புறாக்கூட்டம்
பறந்துசென்று எலி அரசன் வளையருகில் இறங்கியது. தனக்கு எவ்வழியிலும் ஆபத்து
நேரிடலாம் என்று வளைக்கு நூறு வழிகள் செய்து வைத்திருக்கும் எலியரசன்,
புறாக்கள் இறங்கிய ஒலியைக் கேட்டு பயந்து உள்ளேயே இருந்தது.
சித்திரக்கிரீவன் (புறா அரசன்): இரண்யகா, நண்பா! எங்களோடு ஏன் பேசவில்லை?
தன் நண்பன் குரலைக் கேட்ட எலியரசன் வளையிலிருந்து வெளிவந்தது.
இரண்யகன்: நான் மிகவும்
புண்ணியம் செய்தவன். ஆகவே சித்திரக்கிரீவன் ஆகிய என் நண்பன் என் வீட்டுக்கு
வந்தான். இவ்வுலகத்தில் மனம் ஒத்த நண்பர்களோடு பழகுவதைவிட வேறு ஆனந்தம்
ஏது?
பறவைகளின் துன்பத்தை அது நோக்கியது.
இரண்யகன்: நண்பா, நீ எல்லாரைக் காட்டிலும் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே, உனக்கு இப்படிப்பட்ட சோதனை எப்படி ஏற்பட்டது?
சித்திரக்கிரீவன்:
எந்தக் காலத்தில் எது நடக்குமோ அது நடக்கும். விதி வலியது. அதற்கு முன்
எந்த உபாயம் வெல்லும்? கடல் பெருகி மேலிட்டு வந்தால் அதற்குக் கரை ஏது?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment