Wednesday, 15 August 2018

ஜசியா வரி


Siragu Zisya tax1
ஜசியா வரியைப் பற்றி நமது பார்ப்பன ஆதிக்கக் கல்வி முறை தவறான கருத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருக்கிறது. அதன் சுருக்கம் இது தான். இந்துக்களைக் கொடுமைப்படுத்துவதற்கு என்றே பாபர் இந்துக்கள் மீது ஜசியா வரி எனும் வரியை விதித்தார். இவ்வரி இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமியர்கள் இவ்வரியைச் செலுத்தத் தேவை இல்லை. அவருக்குப் பின் வந்த அக்பர் இக்கொடுமையைக் களைய ஜசியா வரியை நீக்கினார். ஆனால் அவுரங்கசீப் தன் மூன்று சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியில் அமர்ந்த பின் இவ்வரியை மீண்டும் விதித்தார். ஏனெனில் அவரங்கசீப் சகிப்புத் தன்மை இல்லாத ஒரு இஸ்லாமிய மதவாதி. இது போன்ற கருத்தை மதவாதிகள் மட்டும் அல்லாமல் அரசின் கல்வித் துறையே பரப்புவது வேதனைக்கு உரியது. ஆனால் உண்மை என்ன?

பாபர் முதன் முதலாக முகலாய அரசை நிறுவிய போது, ஆட்சியை நடத்துவதற்காக மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் திட்டத்தை வகுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தின் படியே வரிகளை விதிக்க அமைச்சர்கள் ஆலோசனை கூறிய போது பாபர் அதை மறுத்தார். இஸ்லாமிய மக்களிடம் இஸ்லாமியச் சட்டப்படி வரி வசூலிக்கலாம் என்றும், இந்துக்கள் மீது இஸ்லாமியச் சட்டங்களைத் திணிப்பது முறையல்ல என்றும், வேறு வழிகளைக் காணும் படியும் அவர் கூறினார். இதன் படி தோன்றியது தான் ஜசியா வரி. அதாவது ஜசியா வரி என்பது இந்துக்களைக் கொடுமைப்படுத்த அல்ல; மாறாக இந்துக்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கும் வகையில் தான் ஜசியா வரி விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம்


Siragu stcutoid1
ஸ்குடாய்ட் (Scutoid) வடிவம் இயற்கையில் எங்கும் காணும் ஒரு வடிவம். ஒரு நீண்ட ஐந்து பக்கங்கள் கொண்ட பட்டக வடிவத்தின் ஒரு முனையில் மட்டும் வெட்டப்பட்டு, அப்பகுதியில் மட்டும் ஆறு பக்கங்கள் கொண்ட தோற்றத்தில் அமைந்த வடிவம் ஸ்குடாய்ட். இவ்வடிவத்தின் நீண்ட முனையில் இருக்கும் சமதளப் பகுதிகளின் ஒரு புறம் அறுகோண வடிவையும், அதன் எதிர்ப்புறம் ஐங்கோண வடிவையும் கொண்டிருக்கும். இத்தகைய வடிவ அமைப்பால் ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பட்டகத்தின் பகுதியையும், ஐந்து பக்கங்கள் கொண்ட மற்றொரு பட்டகத்தின் பகுதியையும் அருகருகே இடைவெளி இன்றி வளைவான தளங்களிலும் மாற்றி மாற்றி வரிசையாகவும் நெருக்கமாகவும் இணைக்க முடியும். நம் உடலில் உள்ள திசுக்களில் உள்ள உயிரணுக்கள் இந்த வடிவம் கொண்டவையே. இத்தகைய பல பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் கொண்ட அமைப்பு, உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இடைவெளி இன்றி அமைந்திட உதவுகிறது. இத்தகைய மேம்பட்ட அமைப்பு உடலின் சக்தியை குறைவாகச் செலவழிக்க உதவுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முப்பரிமாண தோற்றத்தில் காணும்பொழுது, வளைவுகள் கொண்ட உடலுறுப்புகளிலும் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டவகையில் இந்த ஸ்குடாய்ட் வடிவம் கொண்ட உயிரணுக்கள் அமைந்துள்ளன. தோலின் மேற்புறம் ‘எபித்தீலியல்’ உயிரணுக்களின் (epithelial cells) தோற்றமும் ஸ்குடாய்ட் வடிவமே. இவ்வாறு இயற்கையில் பரவலாக எங்கும் காணக்கிடைக்கும் இந்த வடிவத்திற்கு, வடிவியலில் இதுவரை பெயர் இல்லாதிருந்ததால், பெயர் சூட்ட எண்ணிய அறிவியலாளர்கள் வண்டுகள் சிலவற்றின் மேற்புறம் கவசம் போல அமைந்த ‘ஸ்கூட்டெல்லம்’ (scutellum) என்ற அமைப்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் இந்த வடிவத்திற்கு ஸ்குடாய்ட் வடிவம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 9 August 2018

ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது.


siragu poolaan devi1
4 ஆடி 10 அங்குல உயரத்தில் ஒரு பெண், மிகப் பெரிய கொள்ளைக்காரியாக திகழ்ந்தார் என்பது வியப்பைத் தருகின்றதா? ஆம் ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் சாதியின், ஆணாதிக்கத்தின் விளைவால் எந்த அளவிற்கு மனம் வெறுத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்த சாதியவாதிகளை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை  பூலான் தேவி அவர்களின் வாழ்க்கையைப்  படிக்கும் போது தெரிந்துக் கொள்ள முடியும். பூலான் தேவி உத்திரபிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 1963 ஆம் ஆண்டு, ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்க்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தார். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். படகு ஓட்டுவது தான் இவர்களின் வாழ்வாதாரம்.

அன்றைய காலக் கட்டங்களில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்யும் முறை மிகத் தீவிரமாக வடநாடுகளில் (இன்றும் கூட ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது) உண்டு. பூலான் தேவிக்கும் 11 வயதிலேயே (வயதுக்கு வரும் முன்னரே) திருமணம் நடந்தது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்த, 30 வயது புட்டிலால் என்பவன் கணவன். வயது வரும் வரை அம்மா வீட்டில் இருந்த பூலான் தேவியை வலுக்கட்டாயமாக புட்டிலால் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுச் செய்து கொடுமை செய்தான். அங்கிருந்து சில நாட்களில் தப்பி வந்த பூலான் தேவி தன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த நிலையில் பூலான் தேவியின் கணவன் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். கேட்கவே கொடுமையாக இருக்கின்றது அல்லவா? தமிழ் நாட்டில் இன்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள், திராவிடர் காட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் காரணமாக இந்தக் கொடுமைகள் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கின்றது. ஆனால் வடநாடு நம்மை விட  இன்றும் பெண்கள் விடுதலை,  சமூக நீதி போன்ற தளங்களில் மிக பின்தங்கி இருக்கின்றன. அந்த பின்தங்கிய சூழலால் பாதிக்கப்பட்டவர் தான் பூலான் தேவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/

தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)


மௌனம்

siragu mounam1

அலங்கார மேடை
வண்ண
விளக்குகள்,

திடல் நிறைந்திருந்தது.
உள்ளூர்
வெளியூர் வாசிகளோடு.

சப்பானிலிருந்து
சாது
வருகிறார்.

இவர் உலகம்
முழுதும்
போனவராம்,
உயர்ந்த புகழ்
சேர்த்தவராம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வானவில் ஏன் கரைகிறது? (சிறுகதை)


Siragu vaanavil1
வானவில் ஒரு நாள் தரைக்கு இறங்கிவந்தது. அது ஒரு நதிக்கரையோரம் நடந்துசென்றது. அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த வனப்பகுதியில் நிறைய பறவைகள் இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நிறமில்லாமல் அழகின்றி இருந்தன. பறவைகள் நிறமில்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? வானவில் ஆச்சரியம் அடைந்தது. அது நடந்துசென்று கொண்டிருந்தபோது அதனிடம் கிளி ஒன்று வந்தது. கீச்…கீச்… என்ற அதன் குரலை வைத்துதான் அது கிளி என்றே அடையாளம் கண்டுகொண்டது வானவில்.
“நீ ரொம்ப அழகா இருக்க! எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன்!”–கேட்டதுகிளி.
“சரி தர்றேன்! உனக்கு என்ன நிறம் வேணும்?”– இது வானவில்.
“பச்சையும் சிகப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” – கிளி சொன்னது. மெத்தென்ற பஞ்சு போன்ற உடலுக்குப் பச்சை நிறத்தையும், கூரிய நாசிக்குக் கோவைப்பழம் போல் சிவந்த வண்ணத்தையும் தந்தது வானவில்: அதைப் பெற்றுக்கொண்ட கிளி அழகாக மாறியது. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டு போனது.
சிறிது தூரத்தில் புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்ட.து.

“என்ன நிறம் வேணும்?”–கேட்டது வானவில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

திறன்பேசியின் வளர்ச்சி


siragu thiranpesi2
இந்த 2018 ஆம் ஆண்டுடன் ‘திறன்பேசி’ உருவாக்கப்பட்டு கால்நூற்றாண்டு ஆகிவிட்டது.  திறன்பேசி என்பதன் பொருள் என்ன என்பதன் அடிப்படையில் 25 ஆண்டுகள் என்பது இந்தக் கணக்கு. இருப்பினும் இது குறித்து பலருக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கக்கூடும்.

இன்று வாழ்வோரில் “ஹலோ! யார் பேசறது?” என்று கேட்காதவர் இருக்க வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒலியைப் பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக (அல்லது அதிர்வுகளாக) மாற்றி, அதனைக் கம்பிவழி கடத்தி மீண்டும் ஒலியாக ஒலிக்கச் செய்யும் முறையைக் கொண்டு “தொலைபேசி” என்ற கருவியை 1876ல் கிரஹாம் பெல் உருவாக்கினார். தொடர்ந்து கம்பிவழி ஒலியைக் கடத்தும் தொலைபேசி பற்பல வளர்ச்சிகளைக் கண்டது. ஆனாலும் கருவியை விரும்பும் இடத்திற்கு ஒருவர் தம்முடன் எடுத்துச் செல்ல இயலாதிருந்தது. இந்நிலையை மாற்றியது செல்லிடத்திற்கு எடுத்துச் செல்லும் செல்பேசிகள். ‘மோட்டோரோலா’ நிறுவனமே முதலில், 1973 இல் கம்பிவழியின்றி அலைவரிசை வழியாகப் பேசும் மொபைல்ஃபோன் என்றழைக்கப்படும் தொலைபேசியை  உருவாக்கியது. மோட்டோரோலாவின் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர் என்பவர் மன்ஹாட்டனில் இருந்து  ஏப்ரல் 3,  1973 அன்று, நியூஜெர்சியில் உள்ள பெல் ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்த தனது போட்டியாளரான ஜோயல் எஸ். ஏங்கெல் என்பவருக்கு முதல் அழைப்பை அனுப்பிப் பேசினார். அதன் பிறகு இன்று நாம் பயன்படுத்தும் வகையில் அந்த கைபேசியின் வளர்ச்சி வியக்கத்தக்க வண்ணம் மாறியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அரசியலின் உலகக் குறியீடு- பசி

(மாமிசம் சிறுகதைத் தொகுப்பு நூல்- தமிழில்: ரவிக்குமார்)
உலக அளவில் வெவ்வேறு வகையான அரசியல் தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை நிலம் சார்ந்த மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் உண்மையில் அரசியல் எப்போதும் தனக்கான தனித்தன்மையை மேற்கண்ட எந்த ஒன்றுக்காகவும் இழக்க விரும்புவதில்லை என்பதே நிதர்சனம். எதனடிப்படையில்? இந்தியா ‘பன்முகம்” என்ற ஒரு வார்த்தையில் பல சிக்கலான அரசியல் கூறுகளைக் கொண்ட போதிலும், தேர்தல் அரசியலில் கட்சிகள் தங்களது அரசியலை வெவ்வேறு மாநில மக்களின் தன்மைக்கேற்ப கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்வதை ஒரு உதாரணமாகக் கொண்டால் மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Sirgu pasi1


தென்னிந்திய மக்களின் மொழி, உணவு, உடை என்று எடுத்துக் கொண்டால் வடகிழக்குப் பகுதி மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகியவைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. அதே போல் பிற மாநிலங்களான பீகார், இராஜஸ்தான், குஜராத் போன்றவைகள் முழுக்க ஒரு சார்பிலான அடிப்படை பண்பாடுகளில் ஒற்றுமையுடனும் மொழி அடிப்படையில் வேறாகவும்இருப்பதை காண்கிறோம். மேலும் மத்திய, மாநிலங்களிலும் அரசியல் நிர்வாக ரீதியிலும் இது போன்று காணமுடிகிறது. ஆனால் இது முழுக்க மத்தியில் அரசியல் காரணங்களில் மாறுபடுகிறது என்பதை தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்களின் அரசியல் ரீதியிலான கோபங்களை பார்க்க முடிகிறது. ஆனாலும், சுதந்திர காலத்தில் பல வேறுபட்ட மொழி மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மக்கள் சுதந்திரம் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒன்று திரண்டனர். அதற்கு அரசியலில் ‘சுதந்திரம்” என்ற சொல் மக்களிடத்தில் உணர்வு ரீதியிலான தேவையானதாக ஒரு குறியீட்டு மந்திரமாக பயன்படுத்தப்பட்டது என்பது அடிப்படையில் மிக எளிதில் விளங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.