Thursday, 25 April 2019

நான் யார்? என்னைத் தெரியுமா?? (கவிதை)


Dec-23-2017-newsletter1
குயில் கூவதற்கு நான் வேண்டும்
மயில் அகவுதற்கு நான் வேண்டும்
குரங்கு தாவுதற்கு நான் வேண்டும்
மனிசிதலை சிவுதற்கும் நான் வேண்டும்
அவர இவர் மேவுதற்கும் நான் வேண்டும்
வயலில் ஒன்றை தூவுதற்கும் வயிற்றில்
ஒன்றைக் காவுதற்வும் நான் வேண்டும்
அப்படி என்றால் நான் யார்?

தீவுக்கு என்ன வேண்டும் தீர்வு வேண்டும்?
ஒரு நல்ல தீர்வுக்கு என்ன வேண்டும்??
தீவுக்கும் தீர்வுக்கும் நான் வேண்டும்
கதவிலும் நான் இருப்பேன் மதவிலும் நான் இருப்பேன்
இரவிலும் நான் வருவேன் உங்கள் கனவிலும் நான் வருவேன்
நிலவிலும் நானிருப்பேன் உங்கள் நினைவிலே நான் நிச்சயம் இருப்பேன்
நான் உண்மையில் ஆர்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 24 April 2019

தூக்கில் தொங்கிய மாலை (சிறுகதை)


siragu birds
சூரியன் மெல்ல தன் ஒளிக்கதிர்களை விடுவித்தான். நீர் நிரம்பிய குளத்தில் அழகிய தாமரைமுகம் சிவந்தாள். பறவைகள் விழித்த செய்தி மரங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அப்போது இரண்டு காகங்கள் மட்டும் கண் விழிக்காமல் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. புறாக்களும், கொக்குகளும் யானை வடிவத்தையுடைய நீர் கோர்த்த மேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு உயர்ந்து பறந்தன.
சூரியஒளி கூட்டில் பட்டதும் திடீரென அலறி அடித்தடி பதற்றத்துடன் எழுந்தன அவை. சுற்றும் முற்றும் அலைந்து திரிந்து பார்த்தன. ஒரு பறவையும் கண்ணில் தென்படவில்லை. ”ஐயோ நம்மைத் தன்னந் தனியாக விட்டுட்டுப் போயிட்டாங்களே! நாம எப்படி இறை தேடுவது” என்று கவலையுடன் ஒன்றையொன்று பார்த்தன.

முடிவாக, சரி நீ ஒரு பக்கம் போ! நான் ஒரு பக்கம் போறேன்! என மூக்கு உடைந்த காக்காவும் ஒரு கால் உடைந்த காக்காவும் முடிவெடுத்து பறக்க ஆரம்பித்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 April 2019

சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்


siragu paguththarivu1
பகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.

மனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 19 April 2019

சிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)


siragu election-commission3

சிலை அல்ல அவர் சித்தாந்தம்
சீறியெழும் அலைகளாய்
ஆர்ப்பரிக்கும் சிந்தனை
சில்வண்டுகளின் ஆணவத்தை
அழிக்கும் சினத்தீ!
செறுப்பொன்று வீழ்ந்தாலே
முளைத்திடும் சிலையாய்
சிலையொன்றை உடைத்தால்
சித்தாந்தம் சீறாதோ?
உடைத்து விளையாடும்
உஞ்சி விருத்திகளே
உதைகள் உண்டு

உங்களுக்கு காத்திருங்கள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/

Thursday, 18 April 2019

காவிரிக்கு உரியவர் யார்?


siragu kaavirikku2
காவிரிக்கு உரியவர் யார்? என்ற கேள்வி இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு பற்றியஉரிமைப் போராட்டம் குறித்து எழுந்த கேள்வியல்ல. மாறாக, காவிரி யாருக்குரியவள் என்று தமிழிலக்கியப் பாடலும், வடமொழி கல்வெட்டுப்பாடல் ஒன்றும் குறிப்பிடும் செய்தியை மீள்பார்வை செய்யும் முயற்சி.
 திங்கள் மாலை வெண்குடையான்,
  சென்னி,செங்கோல் அது ஓச்சி,
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாய்; வாழி, காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,
  புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
  அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 21-28]
 உரை:

மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, உனது தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன், நீ வாழ்க.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 17 April 2019

பொறுப்புள்ள குழந்தைகளும் பொறுப்பற்ற பெரியவர்களும்.


siragu poruppulla3
மனித இனம் தோன்றியதில் இருந்து முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றிய நாள் வரைக்கும் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விட, முதலாளித்துவம் தோன்றிய ஒரு நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் அளவு பல்லாயிரம் மடங்கு அதிகம் என்று ஒரு கருத்து உண்டு.
முதலாளித்துவத்தின் தொடக்க காலத்தைவிட இப்பொழுது உற்பத்தித்திறன் மிகப் பல மடங்கு உயர்ந்து உள்ளது. ஆனால் இந்த நவீன உற்பத்திப் பண்டங்கள் மனித வாழ்க்கை நலத்திற்குத்தானா என்பது ஆழந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது.

அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த, அண்மையில் (18.2.2019 அன்று) காலமான வாலஸ் ஸ்மித் ப்ரோய்க்கர் (Wallace Smith Broecker) என்ற அறிவியல் அறிஞர் நவீனகாலத்துப் பண்டங்கள் பெருமளவு கரியமில வாயுவை (carbon di oxide) உமிழ்வதைக் கண்டு, இது புவி வெப்பத்தை உயர்த்தும் என்றும், அதனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும் 1975ஆம்ஆண்டிலேயே தெரிவித்தார். 1990ஆம்ஆண்டு வரையிலும் யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 16 April 2019

ஏப்ரல்- 18 – 2019


 Siragu-By-election
வருகின்ற ஏப்ரல் 18 நம் நாட்டுக்கு முக்கியமான தினம். அது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தத் தேர்தலிலாவது நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். குறிப்பாக பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் நபர்களை நமக்கு தெரிந்தால், ஓட்டின் உரிமை, அதன் மதிப்பை எடுத்து சொல்லி ஓட்டுக்கு பணம் பெறுவதைத் தடுக்க வேண்டும். நமக்குத் தேவையான நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல நேரம் இது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகப்படியான இலவசம், ஓட்டுக்கு பணம் என்று உள்ளது.

அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் இந்த சினிமா துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு நடிக்க தெரியும், ஆனால் நாட்டை ஆளும் திறமை உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.