Tuesday, 30 June 2015

மிகினும் குறையினும்- எது?

Dr.Jerome


மருந்து என்றொரு அதிகாரம் திருக்குறளில் உள்ளது. அதன் முதல் குறளிலேயே சித்த மருத்துவத்தின் நோய் நாடலின், அதாவது நோய் இயலின்(Pathology) அடிப்படைக் கொள்கையை, நெற்றிப்பொட்டில் சுட்டது போல “பட்’டென்று கூறிவிடுகிறார் திருவள்ளுவர். அதாவது நோய்கள் வருவதற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை அந்த குறளில் கூறுகிறார்.

நம் உடலில் மூன்று விதமான கண்ணுக்கு புலப்படாத, நுண்நோக்கியால் பார்க்க முடியாத (Microscope), ஆய்வகங்களில் (Laboratory) அளவிட முடியாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைதான் வளியை அதாவது வாதத்தை முதலாவதாகக் கொண்ட வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படுபவை. இந்த மூன்றையும் பற்றி பல தொகுதிகளில் புத்தகங்கள் எழுதலாம். அவ்வளவு நுணுக்கமானவை இவை. அவ்வளவு நுணுக்கமாக தெரிந்துகொள்ளாவிட்டாலும், கண்டிப்பாக இவை பற்றிய அடிப்படை அறிவு 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.  
                  http://siragu.com/?p=17662

Monday, 29 June 2015

பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல்...

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்? பதில்: வணக்கம், நான் இப்பொழுது ஆழி பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன். Langscape என்ற ஒரு மொழிபெயர்ப்பு.. மேலும் படிக்க.. http://siragu.com/?p=17648


           senthil nathan profleFI2

Tuesday, 23 June 2015

மதச்சார்பின்மையை மறுபரிசீலனை செய்ய முடியுமா?

madhachaarpinmai4
இந்திய மதச்சார்பின்மை இப்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. இதொன்றும் புதிதல்ல. காலங்காலமாக நிகழ்ந்து வரும் விஷயம் தான். குறிப்பாக தேர்தலின் போது, மதச்சார்பின்மை அரசியல் கச்சாப் பொருளாகிறது. போலி மதச்சார்பின்மைவாதிகள் என்று பாரதிய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டுவதும், மதவாதிகள் என்று காங்கிரஸ் பா.ஜ.க-வைச் சாடுவதும் நமக்கொன்றும் புதிதில்லையே.
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் முகவுரையில் இருக்கும் “மதச்சார்பற்ற, சமதர்ம” என்ற சொற்கள் இப்போதைய விவாதப் பொருளாகியிருக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விளம்பரங்களில் இருந்த அரசியல் சாசன முகவுரையில் இச்சொற்கள் விடுபட்டுப் போயிருந்தன. பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியிலிருப்பதால் இவ்விடுபடலைப் பற்றி சந்தேகம் எழுவது இயல்பே. 1950ல் இருந்த அரசியல் சாசனப் பதிப்பின் முகவுரையை வெளியிட்டதாக அரசு கூறுகிறது.

1950ல் அமல்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தில் இவ்வார்த்தைகள் இல்லை. நாற்பத்திரண்டாவது அரசியல் சாசன திருத்தத்தில் தான் இச்சொற்கள் அரசியல் சாசன முகவுரையில் ஏற்றப்பட்டன. ஆனால் அரசியல் நிர்ணய அவையில் இவ்வார்த்தைகளைப் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 June 2015

தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல் – இறுதிப் பகுதி

 சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?
mugilan14
கடலோரத்தில் தாதுமணல் என்பது இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை உள்ளதாகத்தான் இருக்கும். அதை பயன்படுத்துவது, அள்ளுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசு வைத்திருக்கிறது. இதனால் பாதிப்புகள் வருவதெல்லாம் பார்த்துத்தான் தாதுமணல் என்ற நூலை எழுதினேன். அப்பொழுது ஒரு வாய்ப்பாக காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல, தமிழ்நாட்டில் சகாயம் அவர்கள் கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலே பணியாற்றிய பொழுது எனக்குத் தெரியும். அவர் மதுரையிலே பணியாற்றிய பொழுது கிரானைட் பிரச்சனைகளில் சில ஊர்களில் நேரடியாக தலையிட்டு அது போன்ற பிரச்சனைகளில் அனுபவமும் பெற்றவன் நான். கனிமவள முறைகேடுகளைப் பற்றி உணர்ந்து அதைப்பற்றியான நூலையும் எழுதியிருக்கிறேன். ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வேலை செய்திருக்கிறோம். இப்படி பல்வேறு விதமான கனிம கொள்ளைகளை எதிர்த்து நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.

இதுமட்டுமல்ல கொல்லி மலையிலே மேட்டூரில் இருக்கக்கூடிய மால்கோ நிறுவனம் அனுமதியில்லாமல் பத்தாண்டுகளுக்கு மேல் கொல்லி மலை செம்மேடு பகுதியிலிருந்து தினசரி 400 லோடு பாக்ஸைட் தாதுவை வெட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது பத்தாண்டுகாலம் அனுமதியே இல்லாமல் ஒரு நிறுவனம். அதை குளத்தூர் மணி, பியூஸ் போன்ற தோழர்கள் உயர்நீதிமன்றத்திலே அள்ளக்கூடாது என்று உத்தரவு பெற்றும் கூட அதை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் இல்லை. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியத்தலைவராக இருந்த பொழுது, அவரிடம் எடுத்துச் சென்று சொன்னதற்கு அவர் இதுபோன்ற நிறுவனத்தில் கை வைப்பதற்கு அவருக்கான அதிகாரத்திலிருந்து பல வேலைகளை மேற்கொண்டார். நேரடியாகச் செய்தால் நெருக்கடி வரும் என்று சொல்லி, முதலில் ஓவர் லோடு என்று அந்த லாரிகளில் பலவற்றை முடக்கினார். பிறகு அதிக வேகம் என்று பிடித்தார். பின்பு ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்காக வரும் பொழுது அதற்கான அனுமதியை ரத்து செய்து அந்த வேலையை நிறுத்த வைத்தார். அதனால் எண்ணற்ற நெருக்கடிகளை சந்தித்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது

Dr.Jerome
விலங்குகளுக்குக் கூட மருத்துவ அறிவு உண்டு. சில உடல் உபாதைகளுக்கு சில மூலிகைகளைத் தேடி உண்ணுகின்ற அறிவு விலங்குகளுக்கும் உண்டு. ஆதிமனிதன் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான்.
suya maruththuvam7
அப்படியானால் மருத்துவர் எதற்கு?

பல கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள் எதற்கு?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday, 20 June 2015

குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுப்படுத்துவோம்

kudiyaali1
இந்திய அரசியலில் சில மணித்துளிகளாவது சர்வாதிகாரியாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் எவ்வித இழப்புகளும் இல்லாமல் நாட்டிலுள்ள எல்லா மதுக்கடைகளையும் இழுத்து மூடுவேன் என முழங்கி, அதற்கான இயக்கமும் கண்டவர் காந்தி. ஒருவரை அடிமையாக்கும் போதை பொருட்களில் மிகவும் கொடூரமானதும், மோசமானதும் மது தான். மதுவினால் தினமும் செத்துக் கொண்டிருப்பது அன்றாடம் உழைக்கும் பாமர மக்கள் என்பதால் அப்படியொரு முடிவுக்கு வந்தார். அவர் மட்டுமல்ல அம்பேத்கர் போன்ற பல தலைவர்களும் அதனை தங்கள் செயல்பாட்டில் உறுதியாகக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரையிலும் மதுவின் பொருட்டு ஏற்படும் விபத்துக்களும், உயிர், உடமை இழப்புகளும், மது ஒழிப்புப் போராட்டங்களும் ஓய்ந்தபாடில்லை. இதன் விளைவு ஒரு நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொகையின் வாழ்வியல் நிதானத்தை செயலிழக்கச் செய்யும் குடிநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவது ஒரு சமூகத்தின் சனநாயகத்துக்கு முற்றிலும் ஆபத்தானது. நாட்டின் எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் சிதைக்கக் கூடியது. எனவே லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் உழைப்புச் சுரண்டலுக்காவது  இவர்களை குடிநோயிலிருந்து காப்பற்ற வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கைகளைக் கொண்டும், அறிவியல் ஆராய்ச்சிகளைக் கொண்டும், பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்டும் மதுவை தீர்க்கமாக ஒழிப்பதில் இங்கே ஒரு வித அரசியல் ஆற்றல் தன்னெழுச்சி பெற முடியாமல் தவித்தாலும், அதனைக் கண்டு மனம் உடையாமல் தினம் தினம் மதுவைக் குடித்து உடலாலும், மனத்தாலும் அவதிப்படும் குடிநோயாளிகளின் பெருக்கத்தையாவது கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது அடுத்த தலைமுறையினரின் ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கும் நம்பிக்கையாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்

mu.varadharaasanaar3
என் நண்பன் ஒருவன் திருமணம். ஆண்டு 1970, அவனுக்கு ஒரு நாவலைத் திருமணப் பரிசாக அளித்தேன். அது நல்ல இசைவான திருமண வாழ்க்கையை வலியுறுத்துகின்ற ஒரு நாவல். பெயர் ‘வாடா மலர்’. அறிஞர் மு. வ. எழுதிய கடைசி நாவல் அது என்று நினைக்கிறேன். பொருத்தம் உண்டோ இல்லையோ அந்தக் காலத்தில் இப்படித்தான் நாங்களும் எங்களைப் போன்ற இளைஞர்களும் மு. வரதராசனாரின் நாவல்களைப் பரிசாக வழங்கினோம். அப்படி அவர் எழுத்தின்மேல் ஒரு பிடிப்பு. (இதே போல் நா. பார்த்தசாரதி மேலும் பிடிப்பு இருந்தது. அது பற்றி வேறொரு சமயம்.)
mu.varadharaasanaar2
தனிப்பட்ட முறையில் எனக்கு மு. வ. மேல் பிடிப்பு உண்டாகக் காரணம், என் தாயார்தான். அவர் மு.வ.வின் அத்தனை கதைகளையும் ‘கரைத்துக் குடித்தவர்’. குறிப்பாகப் ‘பெற்ற மனம்’ நாவல் அவருக்கு மிகவும் பிடிக்கும். மு. வ. வைப் பற்றி இளமையிலேயே எனக்கு எடுத்துரைத்தவர். பலரும் மு. வ. திருப்பத்தூரில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பிறர் அவர் சோளிங்கபுரத்தில் (சுருக்கமாகச் ‘சோளிங்கர்’) பிறந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள். இரண்டுமே தவறு. இராணிப்பேட்டையிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியிலுள்ள வேலம் என்பது அவருடைய சொந்த கிராமம். அங்குதான் அவர் பிறந்ததாக என் தாயார் சொல்லியிருக்கிறார். முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். நானும் என் நண்பர்களும்கூட சோளிங்கரில் தமிழ்ச் சங்கம் வைத்திருந்தோம். என் ஊர் ஆர்க்காடு. வேலத்தைக் கடந்துசெல்லாமல் சோளிங்கர் செல்லமுடியாது. (இந்த இடங்கள் பற்றியெல்லாம் ‘அகல் விளக்கு’ நாவலில் குறிப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.