Thursday, 29 October 2015

ஆதரவற்றோரின் பசியைப் போக்கும் சென்னை பெண்

aadharavatrorin1
சினேகா மோகன்தாஸ். வயது 23 தான். காட்சி தொடர்பியல் (Visual Communication) பட்டதாரி. மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறைகள் மத்தியில் சமூகச்சேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது பார்வையில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது. ‘உணவு வங்கி’ என்ற திட்டத்தைத் தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.. அவருடன் ஒரு சிறிய நேர்க்காணல்:
உணவு வங்கி’ – எப்படி உதித்தது உங்கள் சிந்தனையில்?
சினேகா மோகன்தாஸ்:இந்திய மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழியின்றி கூட பலர் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலையோரங்களில் இப்படி உணவின்றி சிரமப்படும் ஊனமுற்றோர், முதியவர்கள், ஆதரவற்றவர்களை எளிதாகக் காணலாம். இது எனது மனதில் பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த அவலத்தை மாற்ற என்ன வழி என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘உணவு வங்கி’.
உணவு வங்கிசெயல்பாடுகள் என்னென்ன?

aadharavatrorin3
சினேகா மோகன்தாஸ்:நண்பர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு வங்கியின் தன்னார்வலர்களாக இணைந்து உதவி புரிந்து வருகிறார்கள். உங்கள் வீடுகள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில் உணவு மீதமிருந்தால் ( https://www.facebook.com/groups/1628237724087693/ ) என்ற முகநூல் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி அவர்களின் பசியைப் போக்குவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 28 October 2015

உலகையே பாடாய்படுத்தும் உடல் உறுப்பு

tholnoi fi
மூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர்.
இந்த உலகத்தில் தோல் ஏற்படுத்திய சிக்கல் எவ்வளவோ. அதைவிட தன் அமைப்பிலும் செயல்பாட்டினாலும் சிக்கலான உறுப்பு தோல்.
siddhamaruththuvam3

அதனால்தான் தோலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் மிக அதிகம்.
தோல் நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என்பதை எவ்வித தயக்கமுமின்றி என்னால் சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் தோல்நோய்கள் பற்றிய அநேக கேள்விகளுக்கு விடை இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. உதாரணமாக,அரிப்பு எனும் உணர்வு எப்படி ஏற்படுகிறது என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது.
கரப்பான் ஏன் வருகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் கிடையாது (Eczema). இப்படி,‘idiopathic’ அதாவது காரணம் இல்லாமல் வருகின்ற நோய்கள் என நிறைய நோய்கள் நவீன மருத்துவத்தில் விளக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் நவீன மருத்துவத்தை குறைசொல்வதற்காகக் கூறவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 October 2015

ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி

autism1
இன்றைய நாட்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “செசாமீ ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் பாத்திரம் ஜூலியா” (Sesame Street’s Julia character with autism) வரை ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருந்தாலும், முதன் முதலில், கால்நூற்றாண்டிற்கு முன்னர், “ஆட்டிசம்” (Autism, மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு) என்பதைப் பற்றி பலர் அறிந்தது 1988 ஆம் ஆண்டு வெளியான “ரெயின் மேன்” (Rain Man – 1988) என்ற திரைப்படத்தின் மூலம்தான். அதில் நாயகன் ரெயின் மேன் தனக்கு தரும் நச்சரிப்பைத் தாளமுடியாமல், அவரது தம்பி அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி கேட்பார். தம்பியின் முறையீடுகளைப் பற்றிக் கேட்கும் மருத்துவரிடம் ரெயின் மேனின் தம்பி, தனது அண்ணன் எப்பொழுதும் எண்கள், தகவல்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டு அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தன்னை வெறுப்பேற்றுகிறது என்று குற்றம் சாட்டுவார்.
autism3
நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவர் சோதனையைத் துவக்குவார். ஒரு கால்குலேட்டர் கொண்டு 312 யும் 123 யும் பெருக்கினால் என்ன விடை என்று கேட்க, சற்றும் தாமதியாமல் 38,376 என்பார் நாயகன் ரெயின் மேன். அடுத்து, 4343 x 1234 எவ்வளவு என்றாலும் உடனே 5,359,262 என்று பதில் வரும். தொடர்ந்து ஒரு எண்ணைக் கொடுத்து அதன் வர்க்க மூலம் என்ன? என்றாலும் நொடிப்பொழுதில் சரியான விடை கிடைக்கும். ஆனால், அடுத்து ஒரு டாலரில் ஐம்பது சென்ட் செலவழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்றால் தவறான விடை வரும், பிறகு ஒரு மிட்டாயின் விலை நூறு டாலர் என்பார், ஒரு காரின் விலை 1,200 டாலர் என்பார் (https://www.youtube.com/watch?v=pKtPhkx4jV0&feature=youtu.be&t=1h12m45s).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18737

Monday, 26 October 2015

சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல் – இறுதிப்பகுதி

mazhai neer segarippu1
தமிழ்நாட்டில் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு என்னவென்றால் ஏரிகள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களிலும் இந்த மாதிரியான ஏரிகள் இருந்திருக்கிறது. தமிழில் ஏரி என்று சொல்கிறோம், தெலுங்கில் செருவு என்று சொல்வார்கள். கர்நாடகாவில் கேரே என்று சொல்வார்கள். எல்லாமே ஒன்றுதான், பெயர்தான் வித்தியாசம். இது விவசாயத்திற்காக மழைநீரை சேமிக்கிற ஒரு கட்டமைப்பு. இந்த தண்ணீரை குடிக்கமாட்டார்கள், இதை விவசாயத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.
மழைக்காலத்தில் அந்த ஏரியில் தண்ணீரை சேமித்துவிடுவார்கள். மதகு என்று ஒன்று இருக்கும், அந்த மதகை காலையில் திறப்பார்கள், திறந்துவிட்டார்கள் என்றால் வயலுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்றுவிடும், மாலைவேளையில் மூடிவிடுவார்கள். அதேமாதிரி கலங்கள் என்று ஒன்று இருக்கும், கலங்கள் என்னவென்றால் ஏரி நிரம்பிவிட்டது என்றால் உபரிநீர் அந்த கலங்கள் வழியாகச்சென்று பக்கத்து கிராமத்தினுடைய ஏரியை நிரப்பும். ஏரிகளை சங்கிலி மாதிரி இணைத்திருந்தார்கள். மிகச்சிறப்பான கட்டமைப்பு அது. எனவே வீணாவது குறைவாகத்தான் இருக்கும். ஒன்றில் சேமிக்கவில்லை என்றால் அடுத்ததில் சேமிக்கப்படும். அடுத்தது, அடுத்தது என்று சென்றுகொண்டே இருக்கும்.
mazhai neer segarippu12
இந்த ஏரியில் இரண்டு விதமான ஏரிகள் சொல்கிறார்கள். ஒன்று நதியில் ஓடுகிற நீரை திருப்பி ஏரிகளில் சேமிப்பார்கள். அதற்கு உதாரணம் வீராணம். காவிரியில் ஓடுகிற தண்ணீரை திருப்பிவிட்டு வீராணம் ஏரியில் சேமிப்பார்கள். நதிகளே இல்லாத இடத்திலேயும் ஏரிகள் இருந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பாலாறைத் தவிர அதிகமாக ஆறுகள் கிடையாது. அந்த மாதிரி இடங்களிலேயும் பெய்கிற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு உதாரணம் செம்பரம்பாக்கம் ஏரி. தமிழ்நாட்டில் மொத்தம் 39000 ஏரிகள் இருக்கிறது. அதில் பெரிய ஏரி செம்பரம்பாக்கம்தான். அடுத்தது மதுராந்தகம், உத்திரமேரூரில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது, இப்படி பல ஏரிகள் இருக்கிறது. இவையனைத்துமே விவசாயத்திற்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

குடிநீருக்கு ஊரணிகள் என்று இருந்தது அல்லது குளங்கள் என்று இருந்தது. ஊரணி இன்றும் இராமநாதபுரத்தில் இருக்கிறது. பேராவூரணி என்ற ஊரே இருக்கிறது, அந்த ஊரணியை வைத்துத்தான் அதற்கு அந்த பெயரே. அதில் படித்துறை இருக்கும், எனவே படியில் இறங்கிச் சென்று குடத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று உபயோகப்படுத்துவார்கள். எனவே குடிப்பதற்கு ஊரணி, விவசாயத்திற்கு ஏரிகள். கிராமப்புறங்களில் மழைநீர் சேமிப்பை இவ்வாறு சிறப்பாக செய்திருந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 25 October 2015

தலையங்கம்

thalayangam2
இந்தியாவில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் தீண்டாமைக் கொடுமை நடந்துவருகிறது. ஆதிக்க சாதியினர் ஆளும் வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு இக்கொடுமைகளை செய்துவருகின்றனர். அண்மையில் அரியானா மாநிலத்தில் இரு தலித் குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துகளின் மீதான தாக்குதல் தினந்தோறும் நடந்தேறிவருகிறது. பொது மக்களும், ஊடகங்களும் இந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் தட்டி கேட்கவேண்டிய இவர்களே இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அரசு மற்றும் ஆதிக்க சாதியினருக்கு இத்துணிவைக் கொடுத்துள்ளது.  இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங்களில் இருந்து வருவதும், தலித்திய மக்களின் மீது நடக்கும் அடக்குமுறைகளையும் பார்க்கும் போது, இந்திய நாடு எதிலிருந்து விடுதலை அடைந்துள்ளது என்கிற கேள்வி மனிதநேயவாதிகளின் மனதில் உருவாவது நியாயம்தான். பெரியார் கூறியபடி ஆகஸ்டு 15, 1947 -ம் நாளில் இந்தியாவிற்கு கிடைத்த விடுதலை வெறும் மண்ணிற்கு மட்டும்தான், மனிதர்களுக்கு அல்ல என்பதுதான் உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 22 October 2015

சமணர்கள்

samanargal2
ஏறத்தாழ கி.மு. 500-400 காலப்பகுதியில்தான் வடநாட்டுக் கருத்துகள் தமிழ் இலக்கியத்தில் புகுந்திருக்க இயலும். பொதுவாகச் சங்க இலக்கியத்தின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு முதலாக கி.பி. முதல் நூற்றாண்டு வரை கணிக்கப்படுகிறது. சங்க இலக்கியம் இருவேறு இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. குறுநில மன்னர்கள், பழங்குடி இனத்தவர்கள், நாட்டுப்புறங்களிலும் காட்டுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் ஒருபுறம். மூவேந்தர்கள், நகர்ப்புற வாழ்க்கை, மருதநில வாழ்க்கை, கிழார்கள் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்கள் மறுபுறம். சுருங்கச் சொன்னால், மூவேந்தர்களுக்கு முந்திய வாழ்க்கை, மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கை என்ற இரு பகுதிகளைச் சங்க இலக்கியத்தில் (அகநூல்கள் உட்பட) தெளிவாகக் காண இயலும்.
மூவேந்தர்களுக்குப் பிந்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இலக்கியப் பகுதிகளில் வடமொழிக் கருத்துகள் (யாகம் போன்றவை பற்றிய செய்திகள்) விரவியுள்ளன. வடமொழிச் சொற்களும் கலந்திருக்கின்றன. வடமொழிக் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்ட சமயத்தில் அல்லது அதற்குப் பிறகு சங்க இலக்கியத்தின் இந்தப் பகுதிகள் எழுந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது. வடநாட்டிலிருந்து பிராமணர்களும் பிறரும் தென்னாடு நோக்கிவந்து தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து விட்ட காலம் ஏறத்தாழ கி.மு. நான்காம்-மூன்றாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம். குறிப்பாக, ஜைன, பௌத்த மதங்களின் சிந்தனைகளும் சங்க இலக்கியங்களில் காணப்படுவதால், ஏறத்தாழ மகாவீரர், புத்தர் போன்றோரின் காலத்தை ஒட்டியே இத்தகைய கலாச்சாரப் படையெடுப்பு நிகழ்ந்திருக்க இயலும். ஒரு மதம் தோன்றியவுடன் அதைப் பரப்பவேண்டும் என்ற வேகம் காணப்படுவது இயற்கை ஆதலின், இப்புதிய மதங்களின் கருத்துகளைப் பரப்பவேண்டும் என்ற ஆவல் மிக்கவர்களும், தென்னாடு நோக்கி அதுவரை வராத வேதப்பண்பாட்டைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவில் தமிழகத்துக்கு வந்துசேர்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் சமணக் கவிஞர்களும் பௌத்தக் கவிஞர்களும் உள்ளனர். தமிழின் ஆதிநுலான தொல்காப்பியமும் தமிழின் தலைசிறந்த இலக்கியமான திருக்குறளும் ஜைனர்களால் (சமணர்களால்) இயற்றப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 21 October 2015

விவசாயிகள் அன்றும் – இன்றும்

vincent nerkaana10
உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும், நேர்மையின் இலக்கணமான சகாயம் என்பவர் ஒரு மேடையில் விவசாயிகள் பற்றி இவ்வாறு கூறினார், “நான் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கோவணம் கட்டியிருந்த விவசாயி ஒருவரைப் பார்த்து நான் அவரோடு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு அவர் அருகில் சென்றேன். அவரோ ‘அய்யா, நான் கோவணம் கட்டி உங்க கூட நின்றால் நன்றாகவா இருக்கும்’ என்றார். அவரை அழைத்து நான் உங்களோடு புகைப்படம் எடுப்பதை மிக கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன் எனக் கூறி அவரோடு எடுத்த புகைப்படத்தை, தனது அலுவலக முகப்பில் பெரிய அளவில் மாட்டினார். காரணம் கேட்ட சக அலுவலர்களைக் கண்டு, இந்நாட்டிற்கு சோறுபோடும் விவசாயியை கௌரவப்படுத்தாமல், நான் வேறு எவர்களை கௌரவப்படுத்த?” என்றார்.
vivasaayi7
எந்தெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும் என்ற வித்தை நம் விவசாயிகளுக்குத் தெரியும்.
கரிசல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, திணை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்கு விளையும்.
வண்டல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, நெல், மிளகாய், கோதுமை, கேழ்வரகு, வாழை, மஞ்சள், பழ மரங்கள் விளையும்.
செம்மண்: இதில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, நிலக்கடலை, பழ மரங்களும் நன்கு விளையும்.
சாம்பல் நிற மண்: இதில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை விளையும்.
கருமணல் மண்: கரும்பு, சாமை, தட்டைப்பயிறு, முருங்கை என சில பயிர்கள் மட்டுமே விளையக்கூடியது.
கந்தக மண்: இம்மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, திணை, கம்பு, ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.
இவ்வாறு அறிவுமிக்க நம்முன்னோர் விவசாயிகளின் வழி வந்த, இன்றைய விவசாயிகள் படும்பாடு பெரும்பாடாக உள்ளது. மாதம் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைந்த தமிழ்மண்கள் எல்லாம், இப்போது எந்த மாரியும் பெய்யாமல், வானம் பார்த்த பூமியாக வாடிக்கிடக்கிறது விவசாயிகளின் நிலங்களும், வாழ்க்கையும்.
meeththen1
‘கடன் கொடுக்கிறோம், விவசாயம் செய்’ – எனக் கூறிவிட்டு, இன்று வெளிநாட்டுக்காரன் தந்த விதையை போடச்சொல்லி, விளைச்சலே இல்லாமல் விவசாயிகளை கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். விவசாயம் செய்து பிழைக்கத்தான் வழியில்லை என்று, பணம் படைத்தவர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு, பட்டணத்து வீதிகளில் இரவுக் காவலர்களாகவும், கூலி வேலைக்காரர்களாகவும் படையெடுத்து வந்துள்ளனர் விவசாயிகள்.
கிராமத்தில் நடக்கின்ற பாதையில் மாடு சாணி போட்டுவிட்டுச் சென்றால், அதை அப்படியே அள்ளி பக்கத்து வயல்களில் வீசிவிட்டுச் செல்வார்கள் நம் விவசாயிகள். அந்த சாணியும் அந்த வயலுக்கு உரமாகும். எதைச் செய்தாலும் அடுத்தவனுக்கு நல்லது செய்ய வேண்டும், சாணி கூட உரமாகிப் போக வேண்டும் என்று நினைக்கிற படிக்காத விவசாயிகள் கிராமத்தில் இருந்தனர். ஆனால் இன்று படித்தவர்கள் விதைக்குக் கூட உரிமை கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டுக்காரனிடம் காசை வாங்கிக் கொண்டு, மண்ணை மலடாக்கி விவசாயத்தை நாசமாக்கும் விதைகளை விவசாயிகள் தலையில் கட்டுகின்றனர்.

நம் அரசு, நம் தமிழக விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறோம் என்ற பெயரில் இங்கிருக்கும் விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறது என்பதை (செ.நல்லசாமி – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) ஒரு விவசாயி கூறுவதை நீங்களே படியுங்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.