இன்றைய
நாட்களில், குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் “செசாமீ ஸ்ட்ரீட்
நிகழ்ச்சியின் பாத்திரம் ஜூலியா” (Sesame Street’s Julia character with
autism) வரை ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருந்தாலும், முதன்
முதலில், கால்நூற்றாண்டிற்கு முன்னர், “ஆட்டிசம்” (Autism, மதியிறுக்கம்
அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு) என்பதைப் பற்றி பலர் அறிந்தது 1988
ஆம் ஆண்டு வெளியான “ரெயின் மேன்” (Rain Man – 1988) என்ற திரைப்படத்தின்
மூலம்தான். அதில் நாயகன் ரெயின் மேன் தனக்கு தரும் நச்சரிப்பைத்
தாளமுடியாமல், அவரது தம்பி அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று உதவி
கேட்பார். தம்பியின் முறையீடுகளைப் பற்றிக் கேட்கும் மருத்துவரிடம் ரெயின்
மேனின் தம்பி, தனது அண்ணன் எப்பொழுதும் எண்கள், தகவல்கள் ஆகியவற்றில் அதிக
ஆர்வம் கொண்டு அவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தன்னை
வெறுப்பேற்றுகிறது என்று குற்றம் சாட்டுவார்.
நிலைமையைப்
புரிந்து கொண்ட மருத்துவர் சோதனையைத் துவக்குவார். ஒரு கால்குலேட்டர்
கொண்டு 312 யும் 123 யும் பெருக்கினால் என்ன விடை என்று கேட்க, சற்றும்
தாமதியாமல் 38,376 என்பார் நாயகன் ரெயின் மேன். அடுத்து, 4343 x 1234
எவ்வளவு என்றாலும் உடனே 5,359,262 என்று பதில் வரும். தொடர்ந்து ஒரு
எண்ணைக் கொடுத்து அதன் வர்க்க மூலம் என்ன? என்றாலும் நொடிப்பொழுதில் சரியான
விடை கிடைக்கும். ஆனால், அடுத்து ஒரு டாலரில் ஐம்பது சென்ட்
செலவழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்றால் தவறான விடை வரும், பிறகு ஒரு
மிட்டாயின் விலை நூறு டாலர் என்பார், ஒரு காரின் விலை 1,200 டாலர் என்பார்
(https://www.youtube.com/watch?v=pKtPhkx4jV0&feature=youtu.be&t=1h12m45s).
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=18737
http://siragu.com/?p=18737
No comments:
Post a Comment