உலகிற்கே
உணவு கொடுக்கும் உன்னதப் பணி செய்பவனே விவசாயி. இந்திய ஆட்சிப் பணியில்
இருக்கும், நேர்மையின் இலக்கணமான சகாயம் என்பவர் ஒரு மேடையில் விவசாயிகள்
பற்றி இவ்வாறு கூறினார், “நான் ஒரு கிராமத்திற்குச் சென்றேன். அங்கே கோவணம்
கட்டியிருந்த விவசாயி ஒருவரைப் பார்த்து நான் அவரோடு புகைப்படம் எடுக்க
ஆசைப்பட்டு அவர் அருகில் சென்றேன். அவரோ ‘அய்யா, நான் கோவணம் கட்டி உங்க
கூட நின்றால் நன்றாகவா இருக்கும்’ என்றார். அவரை அழைத்து நான் உங்களோடு
புகைப்படம் எடுப்பதை மிக கௌரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன் எனக்
கூறி அவரோடு எடுத்த புகைப்படத்தை, தனது அலுவலக முகப்பில் பெரிய அளவில்
மாட்டினார். காரணம் கேட்ட சக அலுவலர்களைக் கண்டு, இந்நாட்டிற்கு சோறுபோடும்
விவசாயியை கௌரவப்படுத்தாமல், நான் வேறு எவர்களை கௌரவப்படுத்த?” என்றார்.
எந்தெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும் என்ற வித்தை நம் விவசாயிகளுக்குத் தெரியும்.
கரிசல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, திணை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்கு விளையும்.
வண்டல் மண்: இம்மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, நெல், மிளகாய், கோதுமை, கேழ்வரகு, வாழை, மஞ்சள், பழ மரங்கள் விளையும்.
செம்மண்: இதில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, நிலக்கடலை, பழ மரங்களும் நன்கு விளையும்.
சாம்பல் நிற மண்: இதில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை விளையும்.
கருமணல் மண்: கரும்பு, சாமை, தட்டைப்பயிறு, முருங்கை என சில பயிர்கள் மட்டுமே விளையக்கூடியது.
கந்தக மண்: இம்மண் சந்தன
நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, திணை, கம்பு,
ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள்
விளையும்.
இவ்வாறு அறிவுமிக்க நம்முன்னோர்
விவசாயிகளின் வழி வந்த, இன்றைய விவசாயிகள் படும்பாடு பெரும்பாடாக உள்ளது.
மாதம் மும்மாரி மழை பெய்து முப்போகம் விளைந்த தமிழ்மண்கள் எல்லாம், இப்போது
எந்த மாரியும் பெய்யாமல், வானம் பார்த்த பூமியாக வாடிக்கிடக்கிறது
விவசாயிகளின் நிலங்களும், வாழ்க்கையும்.
‘கடன்
கொடுக்கிறோம், விவசாயம் செய்’ – எனக் கூறிவிட்டு, இன்று வெளிநாட்டுக்காரன்
தந்த விதையை போடச்சொல்லி, விளைச்சலே இல்லாமல் விவசாயிகளை கடனாளிகளாக
ஆக்கிவிட்டார்கள். விவசாயம் செய்து பிழைக்கத்தான் வழியில்லை என்று, பணம்
படைத்தவர்களுக்கு நிலத்தை விற்றுவிட்டு, பட்டணத்து வீதிகளில் இரவுக்
காவலர்களாகவும், கூலி வேலைக்காரர்களாகவும் படையெடுத்து வந்துள்ளனர்
விவசாயிகள்.
கிராமத்தில் நடக்கின்ற பாதையில் மாடு சாணி
போட்டுவிட்டுச் சென்றால், அதை அப்படியே அள்ளி பக்கத்து வயல்களில்
வீசிவிட்டுச் செல்வார்கள் நம் விவசாயிகள். அந்த சாணியும் அந்த வயலுக்கு
உரமாகும். எதைச் செய்தாலும் அடுத்தவனுக்கு நல்லது செய்ய வேண்டும், சாணி கூட
உரமாகிப் போக வேண்டும் என்று நினைக்கிற படிக்காத விவசாயிகள் கிராமத்தில்
இருந்தனர். ஆனால் இன்று படித்தவர்கள் விதைக்குக் கூட உரிமை
கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டுக்காரனிடம் காசை வாங்கிக் கொண்டு, மண்ணை
மலடாக்கி விவசாயத்தை நாசமாக்கும் விதைகளை விவசாயிகள் தலையில்
கட்டுகின்றனர்.
நம் அரசு, நம் தமிழக விவசாயிகளுக்கு கடன்
வழங்குகிறோம் என்ற பெயரில் இங்கிருக்கும் விவசாயிகளை எப்படி ஏமாற்றுகிறது
என்பதை (செ.நல்லசாமி – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு) ஒரு விவசாயி கூறுவதை
நீங்களே படியுங்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment