இந்தியாவில் ஆயிரமாண்டுகளுக்கு மேல் தீண்டாமைக் கொடுமை நடந்துவருகிறது.
ஆதிக்க சாதியினர் ஆளும் வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு இக்கொடுமைகளை
செய்துவருகின்றனர். அண்மையில் அரியானா மாநிலத்தில் இரு தலித் குழந்தைகள்
உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தலித்துகளின் மீதான தாக்குதல்
தினந்தோறும் நடந்தேறிவருகிறது. பொது மக்களும், ஊடகங்களும் இந்த
அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், ஏனென்றால் தட்டி கேட்கவேண்டிய
இவர்களே இக்கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அரசு மற்றும் ஆதிக்க
சாதியினருக்கு இத்துணிவைக் கொடுத்துள்ளது. இரட்டைக்குவளை முறை இன்றும்
கிராமங்களில் இருந்து வருவதும், தலித்திய மக்களின் மீது நடக்கும்
அடக்குமுறைகளையும் பார்க்கும் போது, இந்திய நாடு எதிலிருந்து விடுதலை
அடைந்துள்ளது என்கிற கேள்வி மனிதநேயவாதிகளின் மனதில் உருவாவது நியாயம்தான்.
பெரியார் கூறியபடி ஆகஸ்டு 15, 1947 -ம் நாளில் இந்தியாவிற்கு கிடைத்த
விடுதலை வெறும் மண்ணிற்கு மட்டும்தான், மனிதர்களுக்கு அல்ல என்பதுதான்
உண்மை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment