Thursday, 28 April 2016

கவிதைச் சோலை (காலம் கடந்திடும் ஞானம்!, தமிழ் மொழியால் ஓன்று சேர்வோம்!, கண்ணீர்த் துளிகள்)


காலம் கடந்திடும் ஞானம்!

எழுதியவர்: ராஜ் குணநாயகம்
kaalam-fi]
முரண்பாடு என்பது
புத்த சிலைகளின்மீதா
புத்த போதனைகளின்மீதா
புத்த பகவான்மீதா
இல்லை
அதன் பின் ஒளிந்திருக்கும்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின்மீதா?
வேர்களையும்
ஒளிந்திருக்கும் உறங்கும் வித்துக்களையும்
விட்டுவிட்டு
களைகளை நோந்துகொள்வதிலும்
அழித்திட முயற்சிப்பதுவும்
நிரந்தர தீர்வாகிடுமோ?
நீ வணங்கும் கடவுளோடு சேர்த்து

புத்த பகவானையும் வணங்கிவிட்டுப்போ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/?p=20431

Wednesday, 27 April 2016

மாதவிலக்கு


maadhavidaai2
தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்? அதைப் பற்றியா? ஆம் அதைப் பற்றியேதான்.
இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் பட்டென்று உடைத்தாற் போல் எதையும் எழுதி ஏன் தூற்றலை வாங்குவானேன் என்று நினைத்து,  “அந்த 3 நாட்கள்” என்று நாசுக்காக தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். பிறகு தான் ஞானோதயம் ஓங்கி உச்சந்தலையில் கொட்டியது. உள்ளதைஉள்ளபடியே காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறி அதையே தலைப்புமாக வைக்க தீர்மானித்தேன்.
ஏன் தலைப்பிற்கே இவ்வளவு தடுமாற்றம்? அப்படி எதைத்தான் உள்ளே கூறப்போகிறேன்? என்று முகச்சுளிப்போடு அருவருப்பாய் தலைப்பையே வெறித்துக்கொண்டு இருக்காதீர்கள். சற்றே பொறுமையாகி நில்லுங்கள், சக வாழினியைப் படிக்கச் சொல்லலாம்.

maadhavidaai3
யார் அந்த சகவாழினி? ஆஹா! கண்டுபிடித்துவிட்டீர்கள். அவள் தான் பெண்!!. பெண்ணென்றால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? நிலவு தோன்றுகிறதா?, மலர்கள்?, வானவில்?, போதை ஏறுகிறதா?.. பொறுத்தருளவும். நான் ஏன் போதை ஏறுகிறதா என்ற வார்த்தையைக் கூறினேன் என்றால் பெண்ணை பெரும்பாலும் போதை பொருளாகத்தான் பார்க்கின்றார்கள். அதற்குக் காரணமென அந்த உடலுறவு ஒன்றை மட்டும் சொல்லித் திரிகின்றனர் சிலர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 April 2016

அம்பேத்கரை புறக்கணிப்போம்


Dr.Ambedkar4
ஏப்ரல் 14 அன்று நானும் எனது நண்பனும், இன்னொரு நண்பனைப் பார்க்க சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் சந்திக்க வேண்டிய நண்பன், முன்கூட்டியே வந்து காத்துக் கொண்டிருந்ததால், சற்று வேகமாகவே சென்று கொண்டிருந்தோம். எங்கள் நேரம், சாலையில் போக்குவரத்து நெரிசல். காரணம் அன்று அம்பேத்கர் பிறந்தநாள் என்பதால் மக்கள் பலர் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள் இந்த வெயிலிலும். போக்குவரத்துக் காவலர்களின் ஒழுங்குபடுத்துதலால் போக்குவரத்து நெரிசல் அதிக நேரம் நீடிக்கவில்லை.
நான், என் நண்பனிடம் டாக்டர் அம்பேத்கருக்கு இத்தனை பேர் மாலை அணிவிக்க வந்தது மகிழ்ச்சி என்றேன். காலையில் நேரமாக வந்திருந்தால் ஒரு நிமிடமாவது மரியாதை செலுத்தியிருக்கலாம், திட்டமிடாமல் போய்விட்டோம். இப்பொழுது நேரமாகிவிட்டது, எனினும் சந்திக்க வேண்டிய நண்பனை அழைத்து ஒரு ஐந்து நிமிடம் அவகாசம் கேட்கலாமா? என்றேன்.

அதற்கு என் நண்பன், டாக்டர் அம்பேத்கர் சில சட்டம் இயற்றியதைத் தவிர பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உழைத்தவர் என்றான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 25 April 2016

கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை


kohinoor2
இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும்.
Duleep_Singh2
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் சில மன்னர்கள் வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பெயரளவில் மன்னர் என்ற  பட்டம் இருக்கும், ஆனால் உரிமையுடன் ஆள்வதற்கோ நாடிருக்காது. அவர்களுள் ஒருவரென வாழ்ந்தவர் நமது இந்திய மன்னர் துலிப் சிங் (Maharaja Duleep Singh). இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab) அவர்களின் கடைசி மகன். பிற்காலத்தில் நாடில்லாது வாழ்ந்த மன்னர் துலிப் சிங் ஆட்சிக்கு வந்ததென்னவோ அவரது ஐந்தாவது வயதில். அவரது பிரதிநிதியாக அவரது தாயாரான பேரரசியும், பேரரசியின் சகோதரரும்,  அதாவது மன்னரின் தாய்மாமனும் பொறுப்பேற்று நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், துலிப் சிங்கின் பத்து வயதிலேயே நாடு ஆங்கிலேயர் வசமானது, அவரும் நாடுகடத்தப்பட்டார். மன்னர் துலிப் சிங்கின் இரங்கத்தக்க வாழ்க்கை வரலாறுதான் நாம் பார்க்கப்போவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர் அப்துல் ரஹ்மான் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


tntj-fi
கேள்வி: தானே புயலில் தாங்கள் எந்த மாதிரியான உதவிகளை செய்தீர்கள்?
பதில்: தானே புயலிலும் பொருளாதாரம் ரீதியான உதவிகள், மீட்புப் பணிகள், உணவு வழங்குதல் என்று செய்தோம். இந்த வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் செய்த உதவியை விட சிறிது குறைவாக இருந்தாலும் தேவையான அளவிற்கான பணிகளை நாங்கள் செய்தோம்.
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இங்கு என்ன பணிகள் மேற்கிறார்களோ இதே பணிகள்தான் வெளிநாட்டில் இருக்கிற கிளைகளும், வெளி ஊரில் இருக்கிற கிளைகளும் செய்கிறார்களா?
பதில்: வெளிநாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் தேவை அளவிற்கு அவர்களுக்கு இருக்காது. எங்களுடைய முக்கிய குறிக்கோள் ஒன்று இருந்தாலும்கூட அதில் சில இடங்களுக்குத் தகுந்தாற்போன்று சில வேலைகள் கூடும், சில வேலைகள் குறையும். உதாரணமாக இங்கு பிரச்சார நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துவோம். வாரத்திற்கு 200, 300, 500, 600 என்று வாராந்திரமாக கணக்குப்போட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான கூட்டங்கள் ஒரு வாரத்திற்கே நடந்துவிடும். ஒரு மாவட்டம் என்று எடுத்துக்கொண்டால், மாவட்டத்திற்கு 50 கிளைகள் இருந்தது என்றால் ஒவ்வொரு கிளைகளிலும் ஒரு கூட்டம் நடத்துவார்கள். பெண்களை மட்டும் ஏற்பாடு செய்து அவர்களுக்கான அரங்க நிகழ்ச்சி நடத்துவார்கள். மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடத்துவார்கள். வாராந்திரமாகவே பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடக்கிறது பிரச்சார இயக்கங்கள் மற்றும் பல்வேறு செய்திகளை சொல்வதற்கு.

ஆனால் வெளிநாடுகளில் பார்த்தீர்கள் என்றால் அதற்கான தேவைகள் இருக்காது. மக்களை ஏற்பாடு செய்து வாராந்திரமாக ஒரு பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாது, அது குறையும். அதே மாதிரி அரசாங்கத்தை மீறி அங்கு எதுவும் செய்துவிட முடியாது. நாம் சொந்த நாட்டு குடிமக்கள், நாம் இங்கு வேலை செய்வது மாதிரி, வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிற மக்கள் நாம் செய்யும் அளவிற்கு செய்ய முடியாது. அதனால் சில வேலைகள் குறையும். அப்படி குறைந்தாலும்கூட அவர்கள் அங்கு இருந்துகொண்டு இங்கு என்ன செய்யமுடியுமோ, அதாவது இங்கு இருக்கிற மக்களுக்கு உதவிகள் செய்வது, ஆர்வம் ஊட்டுவது, பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவிகள் செய்வது மாதிரியான வேலைகளில் அவர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 April 2016

பாரெங்கும் தமிழ் (கவிதை)


tamil mozhi fi

பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்!
தமிழினம் தனித் தன்மையோடு சேருவதை
பாரீர்! பாரீர்! பாரீர்!
பேதமைகளை தூக்கியெரிந்து ஒன்றாவதை பாரீர்!

வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20400

Wednesday, 20 April 2016

பாரதிதாசன் பாடிய முல்லைக்காட்டில் மணக்கும் நகைச்சுவை


puratchi kavignar1
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்றே பலராலும் அறியப்பட்டாலும் நகைச்சுவை பாடுவதில் ஈடு இணையற்றவர் பாரதிதாசன். அவர்தம் பாடல்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதைக் காண முடியும். காப்பியங்கள் பாடினாலும், தனிக்கவிதைகள் பாடினாலும் நகைச்சுவை ஆங்காங்கே மிளிரச் செய்வது இவரது தனித்த பாங்கு ஆகும். இருண்ட வீட்டில் பாத்திரங்களை வருணிக்கும் போது, படிப்பவர் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு இவரின் கவியாற்றல் பெருகிக்கிடக்கிறது. பாண்டியன் பரிசிலும் நரிக்கண்ணன் மகனை வருணிக்கும் திறத்தில் நகைச்சுவை கலந்தே இருக்கும். இவைதவிர நகைச்சுவை, சிரிப்பு என்றே தலைப்பிட்டு அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நகைச்சுவை உணர்வு நிரம்பிக்கிடக்கின்றது. அவரின் கவிதைச் சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லைக்காடு என்ற தொகுப்பில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஒரு பகுதி அமைந்துள்ளது. அதில் அவர் தன் காலத்தில் நடைபெற்ற நகைச்சுவை கலந்த நிகழ்வுகளைப் படைத்தளித்துள்ளார்.

பாரதிதாசனார் சென்னை நகரத்தில் அவ்வப்போது குடியேற வேண்டியவராக இருந்தார். அப்போது அவர் தங்குமிடத்திற்கு பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதனை அழகான ஒரு கவிதையாக வடித்துள்ளார். சென்னையில் வீட்டு வசதி என்பது அவர் எழுதிய கவிதையின் தலைப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.