புரட்சிக்
கவிஞர் பாரதிதாசன் என்றே பலராலும் அறியப்பட்டாலும் நகைச்சுவை பாடுவதில்
ஈடு இணையற்றவர் பாரதிதாசன். அவர்தம் பாடல்களில் மெல்லிய நகைச்சுவை
இழையோடுவதைக் காண முடியும். காப்பியங்கள் பாடினாலும், தனிக்கவிதைகள்
பாடினாலும் நகைச்சுவை ஆங்காங்கே மிளிரச் செய்வது இவரது தனித்த பாங்கு
ஆகும். இருண்ட வீட்டில் பாத்திரங்களை வருணிக்கும் போது, படிப்பவர்
தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு இவரின் கவியாற்றல்
பெருகிக்கிடக்கிறது. பாண்டியன் பரிசிலும் நரிக்கண்ணன் மகனை வருணிக்கும்
திறத்தில் நகைச்சுவை கலந்தே இருக்கும். இவைதவிர நகைச்சுவை, சிரிப்பு என்றே
தலைப்பிட்டு அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நகைச்சுவை உணர்வு
நிரம்பிக்கிடக்கின்றது. அவரின் கவிதைச் சுவையையும், நகைச்சுவை உணர்வையும்
எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
முல்லைக்காடு என்ற தொகுப்பில் நகைச்சுவை
என்ற தலைப்பில் ஒரு பகுதி அமைந்துள்ளது. அதில் அவர் தன் காலத்தில் நடைபெற்ற
நகைச்சுவை கலந்த நிகழ்வுகளைப் படைத்தளித்துள்ளார்.
பாரதிதாசனார் சென்னை நகரத்தில் அவ்வப்போது
குடியேற வேண்டியவராக இருந்தார். அப்போது அவர் தங்குமிடத்திற்கு பட்டபாடு
கொஞ்ச நஞ்சமல்ல. அதனை அழகான ஒரு கவிதையாக வடித்துள்ளார். சென்னையில் வீட்டு
வசதி என்பது அவர் எழுதிய கவிதையின் தலைப்பு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment