Monday 25 April 2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர் அப்துல் ரஹ்மான் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


tntj-fi
கேள்வி: தானே புயலில் தாங்கள் எந்த மாதிரியான உதவிகளை செய்தீர்கள்?
பதில்: தானே புயலிலும் பொருளாதாரம் ரீதியான உதவிகள், மீட்புப் பணிகள், உணவு வழங்குதல் என்று செய்தோம். இந்த வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் செய்த உதவியை விட சிறிது குறைவாக இருந்தாலும் தேவையான அளவிற்கான பணிகளை நாங்கள் செய்தோம்.
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இங்கு என்ன பணிகள் மேற்கிறார்களோ இதே பணிகள்தான் வெளிநாட்டில் இருக்கிற கிளைகளும், வெளி ஊரில் இருக்கிற கிளைகளும் செய்கிறார்களா?
பதில்: வெளிநாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் தேவை அளவிற்கு அவர்களுக்கு இருக்காது. எங்களுடைய முக்கிய குறிக்கோள் ஒன்று இருந்தாலும்கூட அதில் சில இடங்களுக்குத் தகுந்தாற்போன்று சில வேலைகள் கூடும், சில வேலைகள் குறையும். உதாரணமாக இங்கு பிரச்சார நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துவோம். வாரத்திற்கு 200, 300, 500, 600 என்று வாராந்திரமாக கணக்குப்போட்டுப் பார்த்தால் ஆயிரக்கணக்கான கூட்டங்கள் ஒரு வாரத்திற்கே நடந்துவிடும். ஒரு மாவட்டம் என்று எடுத்துக்கொண்டால், மாவட்டத்திற்கு 50 கிளைகள் இருந்தது என்றால் ஒவ்வொரு கிளைகளிலும் ஒரு கூட்டம் நடத்துவார்கள். பெண்களை மட்டும் ஏற்பாடு செய்து அவர்களுக்கான அரங்க நிகழ்ச்சி நடத்துவார்கள். மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடத்துவார்கள். வாராந்திரமாகவே பல்லாயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடக்கிறது பிரச்சார இயக்கங்கள் மற்றும் பல்வேறு செய்திகளை சொல்வதற்கு.

ஆனால் வெளிநாடுகளில் பார்த்தீர்கள் என்றால் அதற்கான தேவைகள் இருக்காது. மக்களை ஏற்பாடு செய்து வாராந்திரமாக ஒரு பெரிய பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாது, அது குறையும். அதே மாதிரி அரசாங்கத்தை மீறி அங்கு எதுவும் செய்துவிட முடியாது. நாம் சொந்த நாட்டு குடிமக்கள், நாம் இங்கு வேலை செய்வது மாதிரி, வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருக்கிற மக்கள் நாம் செய்யும் அளவிற்கு செய்ய முடியாது. அதனால் சில வேலைகள் குறையும். அப்படி குறைந்தாலும்கூட அவர்கள் அங்கு இருந்துகொண்டு இங்கு என்ன செய்யமுடியுமோ, அதாவது இங்கு இருக்கிற மக்களுக்கு உதவிகள் செய்வது, ஆர்வம் ஊட்டுவது, பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவிகள் செய்வது மாதிரியான வேலைகளில் அவர்கள் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment