Tuesday, 26 June 2018

புரட்சிப் பதிகம் பாடிய நங்கை


இந்திய வரலாற்றில் காலந்தோறும் சாதீயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துக் குரல் கொடுத்தோர் பலர். தமிழகத்தில் பற்பல குலப் பின்னணி கொண்டவரையும் சமமாகக் கருதி தம்முடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை முன்வைத்தது  மட்டுமின்றி,  நாயன்மார்களில் ஒருவராகவும், ஆழ்வார்களில் ஒருவராகவும் ஒடுக்கப்பட்ட குலப்பிரிவினர்களையும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மறைமுக சமத்துவ முறைகள் பலனளிக்காமல் போனதும் வரலாறு காட்டும் உண்மை.
siragu nangai2
இம்முயற்சிகள் பலனளிக்காமல், இக்காலகட்டத்தையும் கடந்து,  தீண்டாமையும் சாதிச் சழக்குகளும் மக்களின் வாழ்வில் தலைவிரித்தாடியக்  கொடுமையைக் கண்டித்து நேரடியாகவே பார்ப்பன எதிர்ப்பு கலகக் குரல்கள் எழத் துவங்கிய காலம் 15 ஆம் நூற்றாண்டு. இக்காலகட்டம் சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பு இலக்கியங்களாகவே  உருவெடுக்கத் தொடங்கிய ஒரு திருப்புமுனைக் காலமாக, சமூகச்சீர்திருத்தக் கருத்துகளை  முன்வைக்கும் ஒரு காலமாக தமிழிலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது.
மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக் காயேனென்னுமோ
நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ
                    -  கபிலர் அகவல்
சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ ?

பந்தமும்  தீயும் வேறோ  பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 22 June 2018

செயற்கரிய செய்! (கவிதை)


siragu iru paadhaigalum4
உண்டு உறங்கிப்
பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும்
வீரத் திறலே!
கற்றோம் பெற்றோம்
ஒருவழிப் பாதையாய்
உழைப்பில் களித்தோம்-
உழைத்துக் களைத்தோம்-
பிண்டம் வளர்க்க
உழைத்தது போதும்-
அயர்ந்தது போதும்-
அதிர்ந்தது போதும்!
அண்டம் வளர்க்க வேண்டும்!
புவி கீர்த்தி பெருக்க வேண்டும்-
எதையோ யாரிடம்
தேடித் தேடி
எங்கெங்கோ அலைந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 June 2018

நினைக்கப்பட வேண்டிய நெ.து.சுந்தரவடிவேலு


sirgu ne.thu.su1
(நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு)

ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதவர்கள் போராடியதன் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வியிலும், அரசு வேலை வேலைகளிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. அவ்வாறு வாய்ப்பு கிடைத்த உடனேயே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இதனால் கதிகலங்கிப் போன பார்ப்பனர்கள் நாம் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதை எப்படியும் தடுத்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். (இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.)
இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை “இந்தியர்களிடம்” (அதாவது பார்ப்பனர்களின் நேரடி ஆட்சியில்) விட்டு விட்டு வெளியேறினார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, நாம் பெற்றுக் கொண்டு இருந்த கல்வி வழியை அடைக்கும் பணியை அவாள் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாட்டில் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் அதிகார வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்குப் போட்டியாக வருவதைக் கிள்ளி எறிய முயன்றார். ஆனால் பெரியாரின் கடுமையான போராட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி விட்டார். அதன் பின் பெருந்தலைவர் காமராசர் பொறுப்பேற்ற உடன் தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் வண்ணம் கிராமப் புறங்களில் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தை வரைந்து கொண்டு வருமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 19 June 2018

எத்துணை மகள்களை இழப்பது ?


Siragu-eththunai1
எத்துணை மகள்களை தமிழ்நாடு இழந்து விட்டது? எந்த மண்ணில் பெண்ணடிமையை எதிர்த்து ஒரு பெரும் போர் நிகழ்த்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றாரோ, அந்த மண்ணில் கனவுகளைச் சுமந்த பறவைகளை நாம் ஈவு இரக்கமின்றி கொன்று போட்டிருக்கின்றோம். ஒவ்வொரு பறவையும் குறிபார்த்து அம்பெய்து கொல்லப்பட்ட பறவைகளே. வறுமையில் உழன்றாலும், அந்த வறுமையை ஒழித்து விடலாம் என்று கண் துஞ்சாது படித்து, கனவுகளை நெஞ்சிற்குள் அதன் நெருப்பின் தகிக்கும் தன்மை மாறாது காத்து வைத்து, உணவின்றி இளைத்தாலும், உணர்வுகளை இளைக்கவிடாது, உறுதியோடு படித்து வெற்றி பெற்ற அனிதாவை, தூக்கு கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்தோம். குடும்ப சூழ்நிலை ஒருபோதும் ஒரு குழந்தையை முன்னேற தடுத்திடக் கூடாது, பள்ளிக் கல்வி படித்து வந்து விட்டால் போதும், மதிப்பெண் அடிப்படையில் எப்படியேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து கனவினை மெய்ப்பித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த கட்டமைப்பை, ஒரு நூற்றாண்டாய் தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய உரிமைத் தளங்களை எல்லாம் ஓர் நொடியில் இழந்து நிற்கின்றது தமிழ்நாடு. 

இவனும் சரியில்ல அவனும் சரியில்ல என்ற புரியாத எலைட் குரல்கள் நடுத்தர மக்களை, அடித்தட்டு மக்களை குழப்பி, இருந்த ஓட்டைக் கோட்டையையும் இடித்துத் தள்ளி அரசியல் அனாதைகளை நிற்கின்றோம். ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று எடுத்த முடிவே ராஜபக்க்ஷே எனும் இன அழிப்பாளனை அதிபராக்கியது. இந்த புரிந்துணர்வு இல்லாமல் தமிழ்நாட்டையும் இந்திய பார்ப்பனிய பனியா அரசு உள்நுழைந்து அழித்திட நாமே வழிவகை செய்தாகி விட்டது. மருத்துவ கட்டமைப்பில் நீட் கொண்டு வந்து பொது சுகாதார கட்டமைப்பை அவர்கள் சிதைத்ததை உணர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அனிதாவை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டும் நீட்டின் தோல்வி தாங்க முடியாமல் பிரதிபா எனும் மாணவியை இழந்தோம். இவர்கள் அனைவருமே மருத்துவர் ஆகக் கூடிய வாய்ப்பு தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தது சமூக நீதி அரசியல் களங்கள். இந்த இழப்புகளுக்கு நம்மை ஆற்றுப்படுத்த இயலாமல் விழி மூடி வலிகளை கடக்கின்றோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 15 June 2018

புதுமை (கவிதை)


siragu pudhumai1

மேடுபள்ளங்களில் ஓடியும்
ஆறுகுளங்களில் விளையாடியும்
அயல்பக்க நட்போடும் இருந்த
குழந்தைகளை
வீடியோகேமிலும்
கணிணிவிளையாட்டிலும்
அடைத்துவைத்தது
நேரமற்றபுதுமை!

பல்லாங்குழி ஆடி பந்தங்களையும்
தாயம் ஆடி தங்கமானஉறவுகளையும்
பலப்படுத்திபொழுதுபோக்கிய

குமரிகளை வாட்ஸ்அப்பிலும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 14 June 2018

காதுகள்- நூலும் வாசிப்பும்


siragu kaadhugal1
(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.)
இயல்பான சம்பவங்கள்:
அது என் கல்லூரியின் மூன்றாமாண்டின் தொடக்க காலம். கல்லூரி முடிந்து பேருந்தைப் பிடிக்கச் செல்லும் போது சாலையின் சற்றுத் தொலைவில் கூட்டம் தென்பட்டது.
அதன் நடுவே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
எதற்காக அந்தக் கூட்டம், யார் அந்த நபர், அவருக்கு என்ன ஆயிற்று? என்று

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையே ஒருசில நிமிடம் திடீரென்று ஓடிச் சென்று சாலையை நெருக்கடிக்கு ஆக்கிய பேருந்தை நெறிப்படுத்த நம்மூர் டிராபிக் போலீசைப் போல தானும் சைகைகளைக் காட்டி அப்பேருந்தையும் சில வாகனங்களையும் சாலையையும் நெறிப்படுத்தினார். கூடத்தில் நின்றிருந்த சிலர் ‘இவன் ஏதோ பைத்தியம் போலிருக்கு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இடையே தன்னையும் தன்னுணர்வற்ற நிலையிலும் இடையிடையே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 13 June 2018

ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்


siragu puranaanooru1
டாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், பேராசிரியர் திருமணம் செல்வக் கேசவராயர் முதலியாரால் பயன்படுத்தப்பட்டது. இந்த நூலைச் செல்வக் கேசவராயரின் பேரன் தி. நம்பிராசன் மறைமலையடிகள் நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நூலைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) ஒளிவருடிய படக்கோப்பு வடிவில் (scanned PDF document) இணையத்தில் வழங்கியுள்ளது:  (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/dr_gu_pope_purananuru.pdf).  இந்த புறநானூறு மூலமும் உரையும்  நூல், உ.வே.சா. அவர்களால் வே. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தின் வழியாக 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட முதற்பதிப்பு  ஆகும் (இதன் விலை  4 ரூபாய்).

இந்த நூலில் ஜி.யு. போப் குறிப்புக்கள் எழுதியுள்ள விதம்,  அவரது ஆழ்ந்து படிக்கும் முறைக்கும் தமிழார்வத்திற்கும் சான்றாக உள்ளது. நூல் முழுவதும் ஒரு பக்கம் விடாது அவரது குறிப்புக்கள் நிரம்பியுள்ளன. இது மிகைப்படுத்துதல் அல்ல, மெய்யாகவே அவர் ஒரே ஒரு பக்கத்தையும் கூட  குறிப்பின்றி விட்டுவைத்தாரில்லை!!! புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் குறிப்பெடுத்துக் கொண்ட முறை குறித்து கண்டவை இங்கே கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.