Monday, 31 December 2018

அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களும்!


siragu govt hospital2

கடந்த நான்கு நாட்களாக, நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு செய்தி என்னவென்றால், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரமாகத்தான் இருக்க முடியும். இந்த செய்தியை விட்டு வெளியே வரமுடியாத நிலையில், மேலும் மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை மாங்காடைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தற்போது, தனக்கும் இதுபோன்ற கொடுமை நிகழ்ந்ததாக தெரிவித்திருக்கிறார். அதுவும், தலைநகரத்திலேயே, மிகப்பெரிய, மிகசிறந்த அரசு மருத்துவமனையாகக் கருதப்படும் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் இந்த மனித தவறு நடந்திருப்பதாகக் கூறுகிறார்.
எப்படி இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்றப்படும் ரத்தம் எவ்வித தொற்றுமில்லாமல் பரிசுத்தமானதா என்ற சோதனையைக் கூட எடுக்கவில்லை என்றால், இந்த துறையின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும்.!

சாத்தூரைச் சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, ரத்தம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அந்த பகுதி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த அந்த பெண்ணிற்கு உடல்நலம் பாதிப்பிற்கு உள்ளானது. வயிற்றுப்போக்கு, வாந்தி என சில உடல் உபாதைகளால், மீண்டும் அங்கே சென்றிருக்கிறார். அப்போது ரத்தப்பரிசோதனையின் போது அப்பெண்ணிற்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முந்தைய பரிசோதனைகளின் போது இல்லாத தொற்று, தற்சமயம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்தநிலையில், சிவகாசியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அளித்த ரத்தத்தில், இந்த தோற்று இருப்பது அறியப்பட்டது. இதில் மிகவும் கொடுமையான ஒரு விசயம் என்னவென்றால், ‘ரத்ததானம் செய்தபோது தனக்கு இந்த தொற்று இருப்பது தெரியாது. வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்தபோது, பரிசோதித்த ரத்தத்தில் தொற்று இருப்பது தெரிந்தவுடனே, மருத்துவமனைக்கு தெரிவித்து விட்டேன்.’ என்று அந்த இளைஞர் கூறியிருக்கிறார். மேலும், அந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி செய்து, தற்சமயம் சிகிச்சையில் இருக்கிறார் என்பதுவுமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 27 December 2018

லாங்ஸ்டோன் ஹுக்ஸ்


siragu Langston_Hughes1
Donald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection of Critical Essays (Prentice Hall, 1973) என்ற நூலில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் (Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின், குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ் அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.

ஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930 இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 26 December 2018

களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?


Thamizhaga-Varalatril-Kalapirar-Kaalam-Book-Cover
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், பகதூர்கான் திப்பு சுல்தான், மாமன்னர் அக்பர் போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ள டி.கே.இரவீந்திரன், களப்பிரர் காலம் குறித்து எழுதியுள்ள நூல் விகடன் பிரசுரம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’ என்ற நூல். இதழியல் பின்புலம் கொண்டவராக வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட டி.கே.இரவீந்திரன் இந்த நூலில் பொதுவாக தமிழக வரலாறு குறித்த அறிமுகத்துடன் துவங்கி, களப்பிரர் வருகை, அவர்களது ஆட்சிக்காலம் என விவரித்து இறுதியில் களப்பிரர் வீழ்ச்சி வரை 30 அத்தியாயங்களில் 230 பக்கங்களில் எளிய நடையில் எழுதியுள்ளார்.
களப்பிரர்கள் காலம் இருண்டகாலம்:

ஆம், இவ்வாறுதான் நாம் பள்ளியில் படித்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களை வீழ்த்தி அன்னியரான இவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் தடயங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் போன்ற தரவுகள் இல்லாமையால் வரலாற்று ஆசிரியர்கள், சங்கம் மருவிய காலம் முதல் மீண்டும் பல்லவரும் பாண்டியரும் தமிழக ஆட்சியை மீட்டெடுக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டனர். கிபி 250 – 550 வரையில் களப்பிரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது என்பதும், அவர்கள் இன்றைய மைசூர் பகுதிக்கு அண்மையில் இருக்கும் நந்தி மலைப்பகுதியில் இருந்த ஓர் இனத்தவர் என்பதால் வடுக கருநாடர் என்று இலக்கியக் குறிப்புகள் கூறுகிறது என்பதுவும் இன்று பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆகவே, வரலாற்றாசிரியர்கள் கருத்தின்படி இவர்கள் ஆரியருமல்லர் தமிழருமல்லர் ஆனால் திராவிட இனத்தவர், குறிப்பாகக் கன்னட வடுகர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 25 December 2018

தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன்.


siragu tamiliyai2
தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்றனர்.

நாம் மேற்கண்டவை பற்றி தெரிந்து கொள்ள அல்லது இன்னும் சற்று அது தொடர்பாக தெளிந்து கொள்ள சமீபத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட முன்னேறிய நகர நாகரீகமான கீழடி தொடர்பான சம்பவங்களை நாம் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது நம்மை மேற் கூறிவற்றோடு ஒன்றச் செய்யும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 20 December 2018

ரஜினி – தலைவரா 1.0? அல்லது வியாபாரியா 2.0?


Siragu Rajni arasiyal2
மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஒரு நடிகர் மட்டும் தானா? அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா? –ஒருசிறு அலசல்.
என் வழி தனி வழி
‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம் கவர்ந்த நடிகர். இவரின் படம் வெளியாகும்போதும், பிறந்த நாளின்போதும் காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.பக்தர்கள் ரஜினிக்கு கோவில் கூட கட்டலாம், தவறில்லை.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கூட படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 19 December 2018

சட்டம் யார் கையில்?


Sirgu siddur decison1
ஒரு மக்கள் நாயகச் சமூகத்தை இயக்கும் சட்டங்களை இயற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.  சமூகமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அவ்வப்போது சட்டத்திருத்தங்கள் செய்யவேண்டும் என்றாலும், புதியசட்டங்களை இயற்றவேண்டும் என்றாலும், பழைய சட்டங்களை நீக்க வேண்டும் என்றாலும், அது மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு, மக்களின் கருத்துப்படிதான், மக்களின் பிரதிநிதிகள் அதைச் செய்யவேண்டும். இந்தியாவில் இவ்வழிமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் பரிதாபத்திற்கு உரிய செய்திகள் நிறையவே உள்ளன.
முதலாவதாக மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு, சட்டம் இயற்றுதல், சட்டத்திருத்தம் செய்தல், சட்டத்தை நீக்குதல் பற்றிய முழுமையான புரிதல் இருப்பது இல்லை. அதிகாரத்தில் இருக்க ஆசைப்படும் அரசியல் கட்சிகள் அவ்வகையான புரிதல் குறைவானவர்களையே தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைக்கின்றன. தவிர்க்கமுடியாதபடி விவரம் புரிந்த மக்கள் நலன் விரும்பிகள் இம்மையத்தில் நுழைய நேரிட்டால், அவர்களைத் தங்கள் அதிகார வலிமையால் அடக்கிவிடுகின்றன. இதன்மூலம் ஒரு சிறு குழுவினர் தங்கள் விருப்பப்படி எல்லாம் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் செய்து கொள்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 18 December 2018

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகள்!


Siragu election result1
தற்சமயம் நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும் செய்தியென்னவென்றால், மோடி அலை என்ற ஒரு மாயபிம்பத்தை தோற்றுவித்து, அதன் மூலம் மக்களை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்த பா.ச.க அரசை, ஒரு மதவாத அரசை, சனநாயகத்திற்கு கேடு விளைவிக்க எத்தனிக்கும், ஒரு சர்வாதிகார அரசை, மக்கள் நலனில் சிறிதும் அக்கறைகொள்ளாத ஒரு அரசை, கொதித்தெழுந்து மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், மதசார்பற்ற சமூகநீதிக்கு போராடும் சக்திகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக, மதவாத பா.ச.க-வை எதிர்த்தது தான். மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், சனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் ஒன்றிணைந்து போராடுகின்றன என்பதை மக்கள் உணர்ந்ததால் தான், பாசிச பா.ச.க-விற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், அங்கு சாதி அடிப்படையிலான ரெட்டிகளுக்கும், கம்மாக்களுக்கும் இடையே அதிகாரப்போட்டி வந்ததின் விளைவு, அரசின் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. அதனை, மிகவும் துணிச்சலாக அணுகுகினார் சந்திரசேகர ராவ். ஆட்சியை களைத்துவிட்டு தேர்தலுக்கு ஆயுத்தமானார். மீண்டும் தன்னுடைய ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மிசோராமில், காங்கிரசு தன்னுடைய நீண்டகால ஆட்சியை இழந்திருக்கிறது. அம்மாநில கட்சியான தேசிய முன்னணி அரிதி பெரும்பான்மை பெற்று, தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. 5 தேர்தல்களில், இரண்டு மாநிலக் கட்சிகள் வென்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.