Thursday, 30 July 2015

குறுகிய காலத்தில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் தமிழக விவசாயி அந்தோணிசாமி!

pudhu raga elumichchai2
நெல்லை மாவட்டம் புளியங்குடி, எலுமிச்சை சாகுபடிக்கும் பழங்களுக்கும் பெயர் பெற்றது. ‘லெமன் சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதியில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் இதனை கூடுதல் விலைக்கு வாங்குவது வழக்கம். இவை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலேயே எலுமிச்சைக்கு என்று பிரத்யேகமான தினசரி சந்தை இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் எலுமிச்சை சாகுபடி செய்துவரும் அந்தோணிசாமி, இரண்டே ஆண்டில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கியுள்ளார். பொதுவாக எலுமிச்சை செடிகள் காய்ப்புக்கு வர 5 முதல் 6 ஆண்டுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புது ரக எலுமிச்சைக்காக, 2004-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அந்தோணிசாமிக்கு ‘சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்து பாராட்டியுள்ளார். அந்தோணிசாமியுடன் ஒரு நேர்க்காணல்:
இந்த யோசனை எப்படி வந்தது?
”நான் 50 வருடங்களாக எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் நிறைய எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போகிறதாகவும் இருந்ததால் கடும் நஷ்டமும், மன உளைச்சலும் அடைந்தேன். அதற்கு தீர்வு காண நானே ஒரு புது எலுமிச்சை ரகத்தை உருவாக்க முடிவெடுத்தேன்.
எப்படி உருவாக்கினீர்கள்?

அதிக நீர்ப்பாசனமும், பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு ஒட்டுக் கட்டினேன். பின்பு, ஒட்டுக் கட்டிய செடியிலிருந்து சிறந்த விளைச்சல் தரும் ஒரு செடியை எடுத்து மீண்டும் ஒட்டுக்கட்டினேன். இப்படி மறுபடியும், மறுபடியும் ஒட்டுக்கட்டி ஒரு ரகத்தை உருவாக்கினேன். இந்த ரகம் 4 தலைமுறை செடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட என்னுடைய 15 ஆண்டு கால உழைப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 28 July 2015

சித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல…

Dr.Jerome
இந்தத் தலைப்பில் ஒரு சித்த மருத்துவராகிய நான் ஒரு கட்டுரை எழுதுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆகவே, இதற்கான விளக்கத்தைக் கூறுவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால், எந்த நாட்டு மருத்துவம்;?
ஒரு வேளை சற்று யோசித்துவிட்டு, ‘தமிழ்நாட்டு மருத்துவம்’ என நீங்கள் பதில் அளிக்கலாம்.
அலோபதி மருத்துவத்தின் தந்தை என ஹிப்போ கிரேடஸ் அழைக்கப்படுகிறார்.
இப்போது இன்னொரு கேள்வியையும் நமக்கு நாமே கேட்டுப்பார்ப்போம்.
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என கிறிஸ்டியன் சாமுவேல் ஹனிமன் என்பவரை அழைக்கிறோம்.
அப்படி சித்த மருத்துவத்தின் தந்தை என யாரை அழைக்கலாம்?
இதற்கு சிலர் அகத்தியர் எனவும், சிலர் போகர் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் சித்த மருத்துவம் இப்படி ஒரு குறிப்பிட்ட நபரால் தோற்றுவிக்கப்படவில்லை. பல கணங்களாக (group) சித்த மருத்துவ அறிஞர்கள் இயங்கி வந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு கல்லூரிபோல இயங்கி வந்துள்ளனர். ஒரு மருத்துவ அறிஞரிடம் பலர் மாணவர்களாக இருந்து மருத்துவம் கற்றிருக்கிறார்கள். இந்த மருத்துவ அறிஞர்களிடையே கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு சித்த மருத்துவ அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மருத்துவத் தொகுப்பே சித்த மருத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 27 July 2015

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

indhiyaavin2
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்றவாரம் (ஜூலை 15, 2015) கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலைநாட்டினர் போலவே அறிவும் திறனும் இருந்தும், உலகிற்குப் பயன்தரும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை என்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பொழுது அவர் கூறினார்.
இக்கருத்து இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் கருத்தாகும். இதன் அடிப்படையில் உலகநாடுகளின் மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தோடு நம் இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சென்ற வாரம் (ஜூலை 17, 2015) உலகப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் மையமான ‘செண்டர் ஃபார் வேர்ல்ட் யுனிவர்சிட்டி ரேங்க்கிங்ஸ்’ (Center for World University Rankings – http://cwur.org/) நிறுவனமும் உலகின் 59 நாடுகளில் இருந்து 1,000 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி, 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையையும் வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகப் பல்கலைக்கழகங்களின் தரத்தை இந்த ஆய்வு மையம் ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவர்களது தளத்தில் 2012, 2013, 2014, 2015 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, முதல் ஐந்து இடங்களில் இருக்கும் கீழ்காணும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முதல் “ஐந்து” இடங்களிலேயே இருந்து வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஒவ்வொருமுறையும் முதலிடத்தையே பிடித்து வருகிறது. மற்ற பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முன்னும் பின்னும் நகர்ந்தாலும் முதல் ஐந்து இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், எம்.ஐ.டி., கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்கள் மட்டுமே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 26 July 2015

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோகன் அவர்களின் நேர்காணல்

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: எனது பெயர் A.அசோகன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாது நுகர்வோர் நல கவுன்சில் என்ற அமைப்பில் 1991ம் ஆண்டிலிருந்து படிக்கும்பொழுதில் இருந்து இன்றுவரை நுகர்வோர் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறேன். தற்பொழுது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT – Federation of Consumer Organizations in Tamilnadu என்ற அமைப்பில் மொத்தம் 400 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அதில் நான் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.
கேள்வி: உங்களது இயக்கத்தின் பணிகள் என்னென்ன?
பதில்: குறிப்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நுகர்வோர் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கு நுகர்வோர் தொடர்பான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி இம்மாதிரியான போட்டிகள் நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட நுகர்வோரின் பிரச்சனைகளை மையமாக, தலைப்பாக வைத்து மாணவர்களின் மத்தியில் பட்டிமன்றத்தின் வாயிலாகவும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்காக நிவாரணத்தைப் பெற்றுத் தருவது, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு இலவசமாக பயிற்சி நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அந்தந்த பகுதியிலே தாலுகா அளவிலான பயிற்சி இருக்கிறது.
குறிப்பாக கூட்டமைப்புக்கு இதற்கு முன்பு ஹென்றி திபென் என்பவர்தான் பொதுச்செயலாளராக இருந்தார். ஆர்.தேசிகன் என்பவர் தான் தலைவராக இருந்தார். ஜேம்ஸ் ஆரோக்கியசாமி பயிற்சி இயக்குனராக இருந்தார். இந்தக் கூட்டமைப்பினுடைய முன்னாள் நிர்வாகிகளான இவர்களுடைய தீவிர செயல்பாடு தமிழகம் முழுக்க நுகர்வோர் விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.
கேள்வி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விளக்கங்கள் கூறவும்?

nugarvor5
பதில்: 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நுகர்வோருக்கு எட்டு உரிமைகள் இருக்கிறது. பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையீட்டு உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, நுகர்வோர் குறை தீர்ப்பதற்கான உரிமை, நல்ல சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை. இந்த எட்டு உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் என்று சொல்லப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் என்பவர் யார் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். உதாரணத்திற்கு நாம் வாங்கக்கூடிய பொருள், அதாவது அது மளிகைப் பொருட்களாகட்டும், எலக்ட்ரானிக் பொருட்களாகட்டும், மருந்துப் பொருட்களாகட்டும் என்று எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர் நுகர்வோர்கள். அதே மாதிரி சேவைகளான மருத்துவசேவை, போக்குவரத்து சேவை, வழக்கறிஞரிடமிருந்து பெறக்கூடிய சேவை, நிதி நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவை, தபால், தந்தி இதுபோன்ற நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவைகளை பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். சாதாரணமாக காசு கொடுத்து வாங்கக்கூடியவர்கள் நுகர்வோர்கள், அதேபோல் காசுகொடுத்துதான் என்று இல்லாமல், உத்திரவாதம் கொடுக்கப்பட்டு பெறக்கூடிய பொருட்கள் மற்றும்சேவைகளைப் பெறுவோரும் நுகர்வோராகக் கருதப்படுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 22 July 2015

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?


americaavin2












உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும் என்பது படிப்பில் முனைப்பாக இருக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். தங்கள் பிள்ளைகளைப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத பெற்றோர்களும் இருப்பது அரிது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் மிகவும் சிறந்ததாக இருப்பதால் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவருக்கு என்ன பயன், அவரது தகுதி அடிப்படையில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் அவருக்கு எட்டாக் கனியாக இருக்கும். அந்த மாணவர், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக தனது தகுதிக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத்தான் கணக்கில் கொள்ள முடியும். அதே போல, எம்.ஐ.டி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பக் கல்வி பயில விரும்பாத மாணவர் அங்கு சென்று பயில வேண்டும் என்று கனவு காண மாட்டார்.
மேலும், மிகப் பெரிய புகழ் பெற்ற சில கல்வி நிறுவனங்களில், பள்ளிகளில் முதல் மாணவர்களாகத் தேறிய மாணவர்களுக்கும் கூட இடம் கிடைக்காது. இதற்கு சில கல்வி நிறுவனங்கள் சமத்துவம் கடைப்பிடிக்கும் நோக்கில் பல்வேறு பின்புலம் உள்ள மாணவர்களையும் ஆதரிக்கும் நோக்கில், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கைகளைத் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்வது காரணமாகும். சமீப காலமாக ஆசிய நாட்டுப் பின்புலம் கொண்ட மாணவர்கள், குறிப்பாக சீன மற்றும் தெற்காசிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வாரிசுகள், புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் இது போன்ற கொள்கைகளினால் நல்ல திறமையும், தகுதியும், மதிப்பெண்களும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற வழக்கும் அமெரிக்க நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 21 July 2015

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?

Dr.Jerome
மருத்துவம் என்பது ஒரு அறிவியல். இன்று அறிவியல் துறை ஒரு துறையாக இல்லாமல் பல்வேறு துறையாக பிரிந்து வளர்ந்துள்ளது. அதிலும் மருத்துவ அறிவியல் மிக நுட்பமாக வளர்ந்து வருகிறது. கண்ணுக்கு ஒரு மருத்துவர், பல்லுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைமாறி பல் மருத்துவத்திலேயே எத்தனை விதமான மருத்துவர்கள் பாருங்கள்.
siththa maruththuvaththil1
-               Orthodontist– பல் சீரமைப்பு நிபுணர்.
-               Periodontist – ஈறு நோய் நிபுணர்.
-               Oral Maxillofacial surgeon – வாய் முக அறுவை சிகிச்சை நிபுணர்
-               Pedodontist– குழந்தைகள் பல் மருத்துவர்
-               Gerodontist– முதியோர் பல் மருத்துவர்
-               Conservative dentist – வேர் சிகிச்சை நிபுணர் (பல் பாதுகாப்பு)
-               Community dentist – சமூக பல் மற்றும் வாய் நல மருத்துவர்.
-               Prostodontist– செயற்கை பல் கட்டும் நிபுணர்.
-               Implantologist – செயற்கை துளை பல் பொருத்தும் மருத்துவர்.
இது பல்லுக்கு மட்டும்தான். இப்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் மிகவும் விரிவாக மருத்துவம் வளர்ந்துகொண்டே செல்லும் இக்காலத்தில் எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?

இதே போல சித்த மருத்துவமும் வளர்ந்துள்ளதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 20 July 2015

குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்

kulandhai4முன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு “முட்டுவீடு” எனக் கூறக்கூடிய கூரை வீட்டில், ஒரு பாட்டியின் தலைமையில் நடக்கும். அன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் எதுவும் கொடுத்ததில்லை நம் தாய்மார்கள். அவ்வளவு ஏன் 5 முதல் 8 வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த, வளர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அன்று குழந்தைகளை எவரும் பொத்திப் பொத்தி பார்த்துக் கொண்டது இல்லை. குழந்தைகளின் விருப்பம் போல் வீதியில் விட்டு விடுவார்கள். அவர்களாகவே சாப்பிடுவார்கள், அவர்களாகவே கிளம்பி பள்ளிக்கூடம் செல்வார்கள். மாலையானதும் பற்பல தமிழர் விளையாட்டுக்களை பல குழந்தைகளுடன் குறிப்பாக ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் விளையாடி மகிழ்வர். இரவானதும் தெருவிளக்கில் கூட்டாக அமர்ந்து படிப்பார்கள். என்ன… வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு படமும் பார்ப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 19 July 2015

இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் உரை

vigneshwaran urai1
அன்பார்ந்த ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை வடஅமெரிக்கவாழ் சகோதர சகோதரிகளே, என் மகன் Boston பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்த நாட்டுக்கு நான் வந்தபின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து நான் உங்கள் அமெரிக்க மண்ணில் காலடிகள் பதிக்கின்றேன். இத்தனை பெருவாரியான தமிழ் உள்ளங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் பங்குபெறுவதில் மனமகிழ்வடைகின்றேன். எங்கள் எல்லோரையும் பிணிக்கும் சக்தியாக துலங்குகின்றாள் தமிழன்னை. எமக்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான குணாம்சமாக அவள் மொழி விளங்குகின்றது. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ஒருமுறை கூறினார், இமயமலை தமிழ்நாட்டில் இல்லை என்பதற்காக ஆண்டவன் கம்பனை இங்கு பிறப்பித்தார் என்று.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவன்போல், இங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்கின்றான் பாரதியார். அதே பாடலில் தொடர்ந்து கூறுகின்றார்,
ஊமையராய், செவிடர்களாய், குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்று.

தமிழ்மொழியை எங்கும் முழங்க வைக்கவேண்டும் என்பதில் பாரதியார் கண்ணாக இருந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday, 16 July 2015

ஈழம் மலருமா…?(கவிதை)

eezham malarum1



















அகண்ட பரவெளியில் – கடல்
வளைத்த சிறுபரப்பில்
விழிநீர்த் துளி வடிவில்
இலங்கை எனும் மாத்தீவு- அது
வடிக்கும் கண்ணீரால்
கடல்மட்டமும் மேல்எழும்பும்!

அஃறிணை உயிர்கள்கூட
அகமகிழ்ந்து இருக்கையிலே
அடிப்படை வாழ்க்கைக்கே
எத்தனை கோடி அல்லல்கள்?
பிறந்த மண்ணில் அகதிகளாய்
உறவிழந்து பொருள் இழந்து
ஊர்மறந்து ஊர்வலமாய்

உருக்கலைந்து அலைய வைத்தீர்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 
http://siragu.com/?p=17772

Wednesday, 15 July 2015

தமிழ்நாட்டில் ஒர் உலக அதிசய மாணவி..

tamilnaattil ulaga adhisaya maanavi2
சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு (Intelligence Quotient) 90லிருந்து 110 வரை இருக்கும். மன வளர்ச்சி குன்றியோருக்கு 90-க்கு குறைவாக இருக்கும். அதிக பட்சமாக பாப் பாடகி மடோனாவுக்கு 140, மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸுக்கு 160, தத்துவ மேதை பேகன்க்கு 200, இஸ்ரேல் நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெடன்யஹுக்கு 180, தென்கொரியாவின் கிம் யூங் யங்குக்கு (Kim Ung Yung) 210 ஐகியூ லெவல் உள்ளது. ஆனால் திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது மாணவி விசாலினியின் IQ 225. இதன் மூலம் விசாலினி, உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் (The Highest IQ in the World) என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆகிறார்.
(விசாலினியின் இந்த நுண்ணறிவு திறன் சாதனை, கின்னஸ் சாதனைக்கு தகுதி உடையது ஆகும். ஆனால் கின்னஸ்சில் இடம் பெறுவதற்கு 14 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். விசாலினிக்கு தற்போது, 12 வயது தான் என்பதால் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும். இனி விசாலினி மற்றும் அவரது தாயார் திருமதி. சேதுராகமாலிகா அவர்களுடன் ஒரு நேர்க்காணல்..
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 14 July 2015

பைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தான் பயம்

Dr.Jerome
ஒரு சித்த மருத்துவரிடம் கிட்டத்தட்ட அனைவரும் கேட்டுவிடும் கேள்வி இது, “டாக்டர், இதற்கு பத்தியம் இருக்கனுமா?”. இவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் என்னவென்றால், “சித்த மருந்துகள் சாப்பிடும்போது கண்டிப்பாக பத்தியம் இருக்க வேண்டுமாம், அப்படி பத்தியம் இருக்க தவறிவிட்டால் மிகவும் ஆபத்தாக எதுவும் நடந்துவிடும்” என நினைக்கிறார்கள். எப்படியோ தொன்றுதொட்டு இப்படி ஒரு பயம் மக்களிடம் பரவி இருந்து வருகிறது.
மேலும் ஒரு சிலர் இதனாலேயே சித்த மருத்துவம் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். இவையெல்லாம் தவறான புரிதல்.
paththiyam1
பத்தியம் என்றால் என்ன?

இதற்கு மிக நீண்ட விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக விளக்குகிறேன். ஒரு நோய்க்கு மருந்து இதுதான் என மருத்துவர் தீர்மானித்து, அதை நோயாளிக்கு கொடுக்க, நோயாளியும் அந்த மருந்தை சரியாக சாப்பிட்டு விடுவார். ஆனால் அந்த மருந்து அதன் முழுமையான வீரியத்தில் உடலில் உட்கிரகிக்கப்பட்டு செயல்பட்டால்தான் நோய் குணமாகும். அப்படி இல்லாமல், அந்த மருந்தின் செயல்பாட்டை குறைக்கும் விதத்தில் ஏதேனும் உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிட்டால் மருந்தின் வீரியம் கெட்டுவிடும். மருந்து உடலில் செயல்படாது அவ்வளவுதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 13 July 2015

பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல் – இறுதிப்பகுதி

senthil nathan profleFI2
கேள்வி: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
senthilnaathan1
பதில்: தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் இருப்பது ஒரு விதத்தில் தி.மு.க, அ.தி.மு.க. கூட்டாட்சிதான் அதாவது ஏகபோகத்திற்குப் (monopoly) பதிலாக இரட்டை ஏகபோகம் (duopoly). தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க. இல்லையென்றால் தி.மு.க என்கிற நிலை. வேறு எந்த மாற்றும் இல்லாத சூழலில்தான் ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் என்று மாற்றி மாற்றிக் இவர்களையேத் தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். இது ஒரு அவலமான சூழல். இவர்களுக்கு மாற்றாக வரக்கூடியவர்கள் சில சமயங்களில் இவர்களை விட மோசமானவர்களாக இருப்பார்களோ என்கிற அச்சம் இருக்கிறது. இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது சிறந்த மாற்றுக் கருத்துக்களை வைத்திருப் பவர்கள், வெறும் லட்சியவாதிகளாக இருக்கிறார்களே ஒழிய நடைமுறைவாதிகளாக இல்லை.  விஜயகாந்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் தி.மு.க, அ.தி.மு.க.வை விட மிக மோசமான அரசியல் கலாச்சாரத்தை உடையவர். இவர்களுக்கு மாற்றாக  காங்கிரசையோ, பா.ஜ.க-வையோ முன்வைக்க முடியாது.

மாற்று என்று சொல்லக்கூடிய பல அமைப்புகள் சாதி அமைப்புகளாக இருக்கின்றன. பல அமைப்புகள் லட்சியவாத அமைப்புகளாக இருந்து, நாடாளுமன்ற அரசியல் என்ற ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாத தன்மை உடையதாக இருக்கின்றன. புதிதாக வந்திருக்கக்கூடிய தமிழ்தேசிய அமைப்புகள்கூட இந்த வகைகளில் அடங்குபவைதான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 12 July 2015

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் தமிழ் விழா 2015 – தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்!

fetna2

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பது, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. [FeTNA - Federation of Tamil Sangams of North America] இந்தப் பேரவையின் ஏற்பாட்டில், ஒவ்வோரு ஆண்டும் சூலை மாதத்தில் முதல்வாரம், அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள நகரத்தில் இரண்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு கலிபோரினியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக நடந்துள்ளது. இந்த தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2000 முதல் 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்ச் சங்கப்பேரவை என்பது “அமெரிக்கவாழ் தமிழர்களின் முகவரி” எனலாம். இந்தப் பேரவை விழாவில் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்கள், திரைத்துறை கலைஞர்கள், தமிழ் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
தமிழ்ச்சங்கப் பேரவையின் தலையாய நோக்கம், அமெரிக்கவாழ் தமிழர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நம் தாய்மொழி தமிழின் சிறப்பை, தமிழர்களின் கலையை, பண்பாட்டை எளியமுறையில் இயல், இசை, நாடகம் மூலம் பரப்புவது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Friday, 10 July 2015

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை (மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை)

sundaram pillai1
‘மேக்பெத்’ ஷேக்ஸ்பியரையோ,  ‘மகாபாரதம்’ வியாசரையோ, ‘இராமாயணம்’ கம்பரையோ, அவ்வளவு ஏன், ‘சிலப்பதிகாரம்’ இளங்கோவடிகளையோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இம்மாதிரித் தொடர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழர்தான். ‘மனோன்மணீயம்’ சுந்தரம் பிள்ளையையும் கேள்விப்படத் தகுதி உள்ளவர்தான். கலைஞர்கள் பெயருக்குமுன் ஊர்ப்பெயரை இணைப்பதுண்டு. நூல் பெயரையே இணைத்து ஒரு புரட்சி செய்தது ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் பல்கலைக் கழகம். வேறு எத்தனை ‘சுந்தரனார்’கள் தமிழகத்தில் இருக்கிறார்களோ தெரியவில்லை – இப்படி ஒரு வேறுபடுத்தல் அவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. (தொடக்கத்தில் பலபேர் அவரை மணியக்காரரும் ஆக்கினார்கள்-மனோன்’மணியம்’ சுந்தரனார் என்று எழுதி!) நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கூச்ச மின்றி ஒருவர் இந்து நாளிதழில் எழுதுகிறார்: “The answer I found in the book is Prof. Sundaram Pillai, better known as ‘Manonmaniam’ Sundaram Pillai”. (27-10-2012). வேறொன்றுமில்லை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் யார் என்று பலத்த சந்தேகம் அவருக்கு வந்துவிட்டதாம், ஒரு புத்தகத்தில் இந்த விடை கிடைத்ததாம்.
சுந்தரம் பிள்ளை:

எழுதியது மிகுதி, மறைந்தபோது வயதோ குறைவு (42-தான்) என்றாலும், தம் வாழ்நாளிலேயே பெரும்புகழ் பெற்றவர் சுந்தரம் பிள்ளை. 1855இல் ஆலப்புழையில் பிறந்தவர். பெற்றோர், பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மாள். 1855இல் பிறந்தவர். 1897இல் மறைந்தார். திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் தத்துவம் கற்றார். அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குப் பின்னர் கிடைத்தது. இடையில் திருநெல்வேலி ம. தி. தா. (மதுரை திரவியம் தாயுமானவர்) இந்துக் கல்லூரி, ‘இந்துக் கலாசாலை’ யாக இருந்தபோது அதன் முதல்வராகவும் (1878) இருந்து அந்தக் கல்லூரியை மேம்படுத்தினார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 8 July 2015

2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை

ulaga makkalin 4
உலகநாடுகள் தங்கள் குடிமக்களின் நலத்தையும், நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க விரும்பும் தலைவர்களும், மக்கள் எப்பொழுதும் கேட்கவிரும்பும் “உடல்நலம், பொருளாதாரம், மகிழ்ச்சி” (Health, Wealth, and Happiness) ஆகியவற்றை தங்கள் மக்களுக்கு அளிப்பதே தாங்கள் பிறவி எடுத்ததன் நோக்கம் என்பது போன்றுதான் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி பதவிக்கு வருகிறார்கள். அவ்வாறு பதவிக்கு வந்தவர்கள் மக்களின் வாழ்வில், நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் அக்கறையைக் காட்டுகிறார்களா என்பதைப் பற்றி மக்களின் கருத்துகள் வேறுபடும். உலக மக்களின் நல்வாழ்வு நிலைமையை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை “காலப் ஆய்வுகுழு”(The Gallup World Poll) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. சென்ற ஆண்டு முதல் “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமைக் குறியீடு”(Global Well-Being Index) பற்றிய ஆய்வுக்குழுவும், காலப் ஆய்வு குழுவும் இணைந்து “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை” (The Gallup-Healthways Global Well-Being Index – The State of Global Well-Being Report) என்ற ஆண்டறிக்கைகளை வெளியிடத் துவங்கின. இந்த ஆண்டும் இந்த ஆய்வுக் குழுக்கள் தயாரித்த, “2014 ஆம் ஆண்டில் உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை” என்ற ஆய்வறிக்கை இந்த வாரம் (ஜூன் 23, 2015‎) வெளிவந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற இருபெரும் ஆய்வுக் குழுக்கள் இணைந்து அளிக்கும் உலகமக்களின் நலவாழ்வு அறிக்கை என்பதால் பெரும்பான்மையான மக்களையும், நாட்டுத் தலைவர்களையும், ஊடகங்களையும் இந்த ஆய்வறிக்கை வெளியீடு ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு வெளியான “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை” பற்றி சிறகு மின்னிதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு காணலாம் – http://siragu.com/?p=15120.

அனைத்துலக நாடுகளிலும் …


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 7 July 2015

மதிப்பெண் வாங்கிக் குவிக்கும் இயந்திரமல்ல மாணவர்கள்

madhippen1
அது என்னவோ தெரியவில்லை, சில வருடங்களாகவே மாணவர்களுக்கு, பெற்றோராலும், ஆசிரியர்களாலும், உறவினர்களாலும், கூடப் பழகும் நண்பர்களாலும் அறிவுரை என்ற பெயரில், “நீ பத்தாவது படிக்கப் போகிறாய்?, நீ பன்னிரெண்டாவது படிக்கப்போகிறாய்?, இதுதான் உன் வாழ்வை முடிவு செய்யும் படிப்பு. ஆதலால் கண்டிப்பாக நீ பத்தாவதில் 500க்கு 501ம், பன்னிரெண்டாவதில் 1200க்கு 1201ம் எடுத்தால்தான் நல்ல நிலைமைக்கு (அதாவது எதிர்காலத்தில் நோகாமல் கோடி கோடியாய் உட்கார்ந்து சம்பாதிக்கும் வேலையைப் பெற முடியும்) வர முடியும். ஆதலால் படி படி படி” என்ற முழக்கத்தில் மாணவர்களின் மூளையே குழம்பி, அவர்களை மூலையில் கூட படுக்கவிடாமல் செய்துவிடுகின்றனர்.
முன்பெல்லாம் ஒருவர் 100க்கு 60, 70 மதிப்பெண் பெற்றாலே, ‘அடேயப்பா.. நீ பெரிய படிப்பாளிதான்!’ என மூக்குமேலே விரலை வைத்து, நாக்கு நோகப் பேசுவார்கள். அதன் பிறகு மதிப்பெண் ஏறுமுகமாக… இப்போதெல்லாம் மாணவர்கள் சர்வ சாதாரணமாக 95% மேல் வாங்குகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 85% எடுத்தால் இருந்த மதிப்பு, இப்போது அவ்வளவாக இல்லாமல் போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 6 July 2015

சித்த மருந்துகளின் வடிவங்கள்

Dr.Jerome
ஒரு மருத்துவர் என்றால் யார்?, அவர் என்ன செய்வார்? என்று ஒரு குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பதில் சொல்லும், “டாக்டர் ஊசி போடுவார்”. குழந்தைகளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நான் கூறிவிடமாட்டேன், பெரியவர்களுக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான். மருந்து என்றால் என்ன? நோயைக் குணமாக்கும் ஒரு பொருள். அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
siththa marundhugalin vadivam11மருந்து என்றாலே ஊசி, மாத்திரை, டானிக் முடிந்தது. இதுதான் பெரியவர்களின் புரிதலும் கூட. மாத்திரை என்பது மருந்தின் ஒரு வடிவம். அதை வாய்வழியே கொடுத்தும் செயல்படாது என்ற நிலையில் அல்லது வாய்வழியே கொடுக்க முடியாத நேரத்தில், ஒரு ஊசியின் வழியே உடலுக்குள் அந்த மருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல அந்த மருந்து திரவவடிவில் டானிக்காக கொடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் மருந்துகளின் வடிவங்கள்.

இப்படி சித்த மருத்துவத்தில் மருந்துகள் எத்தனை வடிவங்களில் உள்ளது தெரியுமா?. 32 வடிவங்களில் சித்த மருந்துகள் செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றிய மிகச் சுருக்கமான ஒரு அறிமுகத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடுப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 5 July 2015

பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களின் நேர்காணல் – பகுதி-2

senthil nathan profleFI2

கேள்வி: உங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

பதில்: தமிழ் மொழி உரிமைக்கூட்டியக்கம் என்கிற இந்த அமைப்பு அரசுத்துறையிலும், தனியார் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி உரியவாறு பயன்படுத்தப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கும், திட்டங்கள் தீட்டப்படுவதற்கும், அதனுடைய நடைமுறைகள் நிறைவேற்றப்படுவதற்குமான ஒரு முன்முயற்சி எடுத்து செய்யக்கூடிய ஒரு அமைப்பாக, அதை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கக்கூடிய அமைப்பாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் எதிர்த்துப் போராட வேண்டிய நேரத்தில் எதிர்த்துப் போராடி, ஆக்கப்பூர்வமாக ஆலோசனை தரவேண்டிய நேரத்தில் ஆலோசனையும் தந்து செயல்படக்கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான அமைப்பாகத்தான் இருக்க விரும்புகிறோம். இது பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள், பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தமிழின் மீது ஆர்வம் கொண்ட மற்ற அமைப்புகள் எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பு என்பது பல்வேறு அரசியல் அமைப்புகளின் கூட்டமைப்புதான். ஆனால் இதனுடைய நோக்கம் தமிழுக்கு சரியான அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்பது. இந்த நோக்கத்தை அடைவதற்கு நாங்கள் பல்வேறு விதமான வழிமுறைகளை யோசித்து வருகிறோம். எங்களுடைய பலத்தைப் பொறுத்து அவற்றை நாங்கள் ஒவ்வொன்றாக செய்வோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.  

Thursday, 2 July 2015

மூலிகைகளின் முதல்வன்

                        mooligaigalin3


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், பாபநாசசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தைச் சுற்றி, புதர்கள்மண்டியும், பொதுமக்களின் கழிப்பிடமாகவும், துர்நாற்றம் வீசக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இன்று அதை அடியோடு மாற்றியமைத்து, மூலிகை மணம் வீசிக்கொண்டிருக்கும்படியாக, 1.5ஏக்கர் பரப்பளவில் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளார் சித்தமருத்துவரும், உலகத் தமிழ் மருத்துவக்கழகத் தலைவருமான மைக்கேல் ஜெயராஜ். தமிழ் மருத்துவத்தின் நிறுவனர்களான சித்தர் பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்’ என இதற்குப் பெயரிட்டுள்ளார். இத்தோட்டத்தை உருவாக்க மைக்கேல் ஜெயராஜ் எடுத்த முயற்சிகளும், பிரயாசங்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.  

Wednesday, 1 July 2015

பெற்றோர்களையும் மாணவர்களையும் ஏமாற்றும் கல்விக் குழுமங்கள்

நமது நாட்டில் கல்வியை வியாபாரமாக மாற்றிய மாபெரும் பெருமை நமது அரசியல் கட்சிகளையும், அதில் இருப்பவர்களை மட்டும் சேர்வதில்லை, மக்களையும் சேரும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குச் சென்று சமுதாயத்தில நல்ல நிலையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதனால் இவர்கள் எந்தப் பள்ளி மற்றும் கல்லூரி சிறந்தது என்று தேடுகிறார்கள். இவர்கள் தேடலை பயன்படுத்தும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள், கல்வியை வியாபாரமாக மாற்றுகிறார்கள்.

                  kalvi1


பெற்றோர்களைக் கவர்வதற்கு தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்கள் இத்தனை சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர், இந்த ஆண்டு எங்கள் கல்விக் குழுமம் இத்தனை சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த கவர்ச்சியினைப் பார்க்கும் பெற்றோர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை, நாம் பிள்ளைகளை சேர்க்க இருக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்களை அறிய Regional Office of Education என்ற அரசு அலுவலகம் ஒன்று இருப்பதை மறந்துவிடுகின்றனர். அந்த அலுவலகம் சென்று கல்லூரிகள் மற்றும் பள்ளிகளைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பெறாமல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செய்யும் விளம்பரங்களை மட்டும் பார்த்துவிட்டு பிள்ளைகளைக் கொண்டுச்சென்று படிப்பதற்குச் சேர்க்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.