உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும் என்பது படிப்பில் முனைப்பாக இருக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். தங்கள் பிள்ளைகளைப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத பெற்றோர்களும் இருப்பது அரிது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் மிகவும் சிறந்ததாக இருப்பதால் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவருக்கு என்ன பயன், அவரது தகுதி அடிப்படையில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் அவருக்கு எட்டாக் கனியாக இருக்கும். அந்த மாணவர், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக தனது தகுதிக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத்தான் கணக்கில் கொள்ள முடியும். அதே போல, எம்.ஐ.டி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பக் கல்வி பயில விரும்பாத மாணவர் அங்கு சென்று பயில வேண்டும் என்று கனவு காண மாட்டார்.
மேலும், மிகப் பெரிய புகழ் பெற்ற சில
கல்வி நிறுவனங்களில், பள்ளிகளில் முதல் மாணவர்களாகத் தேறிய மாணவர்களுக்கும்
கூட இடம் கிடைக்காது. இதற்கு சில கல்வி நிறுவனங்கள் சமத்துவம்
கடைப்பிடிக்கும் நோக்கில் பல்வேறு பின்புலம் உள்ள மாணவர்களையும் ஆதரிக்கும்
நோக்கில், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கைகளைத் தங்கள் நோக்கத்திற்கு
ஏற்ற வகையில் வகுத்துக் கொள்வது காரணமாகும். சமீப காலமாக ஆசிய நாட்டுப்
பின்புலம் கொண்ட மாணவர்கள், குறிப்பாக சீன மற்றும் தெற்காசிய நாட்டினை
பூர்வீகமாகக் கொண்டவர்களின் வாரிசுகள், புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களில்
இது போன்ற கொள்கைகளினால் நல்ல திறமையும், தகுதியும், மதிப்பெண்களும்
இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற வழக்கும் அமெரிக்க நீதி
மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment