கேள்வி: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
பதில்:
தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் இருப்பது ஒரு விதத்தில் தி.மு.க,
அ.தி.மு.க. கூட்டாட்சிதான் அதாவது ஏகபோகத்திற்குப் (monopoly) பதிலாக
இரட்டை ஏகபோகம் (duopoly). தி.மு.க. இல்லையென்றால் அ.தி.மு.க, அ.தி.மு.க.
இல்லையென்றால் தி.மு.க என்கிற நிலை. வேறு எந்த மாற்றும் இல்லாத சூழலில்தான்
ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் என்று மாற்றி மாற்றிக் இவர்களையேத்
தேர்ந்தெடுக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள். இது ஒரு அவலமான சூழல்.
இவர்களுக்கு மாற்றாக வரக்கூடியவர்கள் சில சமயங்களில் இவர்களை விட
மோசமானவர்களாக இருப்பார்களோ என்கிற அச்சம் இருக்கிறது. இன்னொரு பக்கம்
பார்க்கும் பொழுது சிறந்த மாற்றுக் கருத்துக்களை வைத்திருப் பவர்கள்,
வெறும் லட்சியவாதிகளாக இருக்கிறார்களே ஒழிய நடைமுறைவாதிகளாக இல்லை.
விஜயகாந்தை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் தி.மு.க, அ.தி.மு.க.வை விட மிக
மோசமான அரசியல் கலாச்சாரத்தை உடையவர். இவர்களுக்கு மாற்றாக காங்கிரசையோ,
பா.ஜ.க-வையோ முன்வைக்க முடியாது.
மாற்று என்று சொல்லக்கூடிய பல அமைப்புகள்
சாதி அமைப்புகளாக இருக்கின்றன. பல அமைப்புகள் லட்சியவாத அமைப்புகளாக
இருந்து, நாடாளுமன்ற அரசியல் என்ற ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாத
தன்மை உடையதாக இருக்கின்றன. புதிதாக வந்திருக்கக்கூடிய தமிழ்தேசிய
அமைப்புகள்கூட இந்த வகைகளில் அடங்குபவைதான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment