ஒரு
சித்த மருத்துவரிடம் கிட்டத்தட்ட அனைவரும் கேட்டுவிடும் கேள்வி இது,
“டாக்டர், இதற்கு பத்தியம் இருக்கனுமா?”. இவர்கள் மனதில் இருக்கும் எண்ணம்
என்னவென்றால், “சித்த மருந்துகள் சாப்பிடும்போது கண்டிப்பாக பத்தியம்
இருக்க வேண்டுமாம், அப்படி பத்தியம் இருக்க தவறிவிட்டால் மிகவும் ஆபத்தாக
எதுவும் நடந்துவிடும்” என நினைக்கிறார்கள். எப்படியோ தொன்றுதொட்டு இப்படி
ஒரு பயம் மக்களிடம் பரவி இருந்து வருகிறது.
மேலும் ஒரு சிலர் இதனாலேயே சித்த மருத்துவம் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். இவையெல்லாம் தவறான புரிதல்.
பத்தியம் என்றால் என்ன?
இதற்கு மிக நீண்ட விளக்கம் கொடுக்கலாம்.
என்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக விளக்குகிறேன். ஒரு
நோய்க்கு மருந்து இதுதான் என மருத்துவர் தீர்மானித்து, அதை நோயாளிக்கு
கொடுக்க, நோயாளியும் அந்த மருந்தை சரியாக சாப்பிட்டு விடுவார். ஆனால் அந்த
மருந்து அதன் முழுமையான வீரியத்தில் உடலில் உட்கிரகிக்கப்பட்டு
செயல்பட்டால்தான் நோய் குணமாகும். அப்படி இல்லாமல், அந்த மருந்தின்
செயல்பாட்டை குறைக்கும் விதத்தில் ஏதேனும் உணவுகளை அதனுடன் சேர்த்து
சாப்பிட்டால் மருந்தின் வீரியம் கெட்டுவிடும். மருந்து உடலில் செயல்படாது
அவ்வளவுதான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment