கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: எனது பெயர்
A.அசோகன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாது நுகர்வோர் நல
கவுன்சில் என்ற அமைப்பில் 1991ம் ஆண்டிலிருந்து படிக்கும்பொழுதில் இருந்து
இன்றுவரை நுகர்வோர் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறேன். தற்பொழுது
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT –
Federation of Consumer Organizations in Tamilnadu என்ற அமைப்பில்
மொத்தம் 400 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அதில் நான்
பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.
கேள்வி: உங்களது இயக்கத்தின் பணிகள் என்னென்ன?
பதில்: குறிப்பாக
நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதேபோல் பள்ளி, கல்லூரி
மாணவர்களிடையே நுகர்வோர் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
அவர்களுக்கு நுகர்வோர் தொடர்பான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி
இம்மாதிரியான போட்டிகள் நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
ஒரு குறிப்பிட்ட நுகர்வோரின் பிரச்சனைகளை மையமாக, தலைப்பாக வைத்து
மாணவர்களின் மத்தியில் பட்டிமன்றத்தின் வாயிலாகவும் நுகர்வோர்
விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட நுகர்வோர்
சார்பாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்காக
நிவாரணத்தைப் பெற்றுத் தருவது, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராமப்புற,
நகர்ப்புற ஏழை மக்களுக்கு இலவசமாக பயிற்சி நடத்தி அதன் மூலமாக
விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அந்தந்த பகுதியிலே தாலுகா அளவிலான பயிற்சி
இருக்கிறது.
குறிப்பாக கூட்டமைப்புக்கு இதற்கு முன்பு
ஹென்றி திபென் என்பவர்தான் பொதுச்செயலாளராக இருந்தார். ஆர்.தேசிகன் என்பவர்
தான் தலைவராக இருந்தார். ஜேம்ஸ் ஆரோக்கியசாமி பயிற்சி இயக்குனராக
இருந்தார். இந்தக் கூட்டமைப்பினுடைய முன்னாள் நிர்வாகிகளான இவர்களுடைய
தீவிர செயல்பாடு தமிழகம் முழுக்க நுகர்வோர் விழிப்புணர்வைக்
கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.
கேள்வி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விளக்கங்கள் கூறவும்?
பதில்: 1986ம்
ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நுகர்வோருக்கு
எட்டு உரிமைகள் இருக்கிறது. பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை,
தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையீட்டு உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை,
நுகர்வோர் குறை தீர்ப்பதற்கான உரிமை, நல்ல சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான
உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை. இந்த எட்டு உரிமைகள் நுகர்வோர்
உரிமைகள் என்று சொல்லப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில்
நுகர்வோர் என்பவர் யார் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒரு
பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர்கள்
நுகர்வோர்கள். உதாரணத்திற்கு நாம் வாங்கக்கூடிய பொருள், அதாவது அது மளிகைப்
பொருட்களாகட்டும், எலக்ட்ரானிக் பொருட்களாகட்டும், மருந்துப்
பொருட்களாகட்டும் என்று எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கி
பயன்படுத்துவோர் நுகர்வோர்கள். அதே மாதிரி சேவைகளான மருத்துவசேவை,
போக்குவரத்து சேவை, வழக்கறிஞரிடமிருந்து பெறக்கூடிய சேவை, நிதி
நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவை, தபால், தந்தி இதுபோன்ற
நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவைகளை பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள்.
சாதாரணமாக காசு கொடுத்து வாங்கக்கூடியவர்கள் நுகர்வோர்கள், அதேபோல்
காசுகொடுத்துதான் என்று இல்லாமல், உத்திரவாதம் கொடுக்கப்பட்டு பெறக்கூடிய
பொருட்கள் மற்றும்சேவைகளைப் பெறுவோரும் நுகர்வோராகக் கருதப்படுகிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment