நெல்லை
மாவட்டம் புளியங்குடி, எலுமிச்சை சாகுபடிக்கும் பழங்களுக்கும் பெயர்
பெற்றது. ‘லெமன் சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதியில் உற்பத்தியாகும்
எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் தன்மை அதிகமாக இருப்பதால்
வியாபாரிகள் இதனை கூடுதல் விலைக்கு வாங்குவது வழக்கம். இவை தமிழ்நாடு
மற்றும் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி
செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலேயே எலுமிச்சைக்கு என்று பிரத்யேகமான
தினசரி சந்தை இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில்
எலுமிச்சை சாகுபடி செய்துவரும் அந்தோணிசாமி, இரண்டே ஆண்டில் காய்ப்புக்கு
வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கியுள்ளார். பொதுவாக எலுமிச்சை செடிகள்
காய்ப்புக்கு வர 5 முதல் 6 ஆண்டுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புது
ரக எலுமிச்சைக்காக, 2004-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்
அவர்கள், அந்தோணிசாமிக்கு ‘சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்து
பாராட்டியுள்ளார். அந்தோணிசாமியுடன் ஒரு நேர்க்காணல்:
இந்த யோசனை எப்படி வந்தது?
”நான் 50 வருடங்களாக எலுமிச்சை சாகுபடி
செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் நிறைய எலுமிச்சை ரகங்கள்
வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போகிறதாகவும்
இருந்ததால் கடும் நஷ்டமும், மன உளைச்சலும் அடைந்தேன். அதற்கு தீர்வு காண
நானே ஒரு புது எலுமிச்சை ரகத்தை உருவாக்க முடிவெடுத்தேன்.
எப்படி உருவாக்கினீர்கள்?
அதிக நீர்ப்பாசனமும், பூச்சி மருந்துகளும்
தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு ஒட்டுக்
கட்டினேன். பின்பு, ஒட்டுக் கட்டிய செடியிலிருந்து சிறந்த விளைச்சல் தரும்
ஒரு செடியை எடுத்து மீண்டும் ஒட்டுக்கட்டினேன். இப்படி மறுபடியும்,
மறுபடியும் ஒட்டுக்கட்டி ஒரு ரகத்தை உருவாக்கினேன். இந்த ரகம் 4 தலைமுறை
செடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட என்னுடைய 15
ஆண்டு கால உழைப்பு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment