Monday, 27 July 2015

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

indhiyaavin2
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்றவாரம் (ஜூலை 15, 2015) கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலைநாட்டினர் போலவே அறிவும் திறனும் இருந்தும், உலகிற்குப் பயன்தரும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை என்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பொழுது அவர் கூறினார்.
இக்கருத்து இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் கருத்தாகும். இதன் அடிப்படையில் உலகநாடுகளின் மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தோடு நம் இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சென்ற வாரம் (ஜூலை 17, 2015) உலகப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் மையமான ‘செண்டர் ஃபார் வேர்ல்ட் யுனிவர்சிட்டி ரேங்க்கிங்ஸ்’ (Center for World University Rankings – http://cwur.org/) நிறுவனமும் உலகின் 59 நாடுகளில் இருந்து 1,000 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி, 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையையும் வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகப் பல்கலைக்கழகங்களின் தரத்தை இந்த ஆய்வு மையம் ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவர்களது தளத்தில் 2012, 2013, 2014, 2015 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, முதல் ஐந்து இடங்களில் இருக்கும் கீழ்காணும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முதல் “ஐந்து” இடங்களிலேயே இருந்து வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஒவ்வொருமுறையும் முதலிடத்தையே பிடித்து வருகிறது. மற்ற பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முன்னும் பின்னும் நகர்ந்தாலும் முதல் ஐந்து இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், எம்.ஐ.டி., கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்கள் மட்டுமே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

No comments:

Post a Comment