கேள்வி: உங்கள் அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?
பதில்: தமிழ் மொழி
உரிமைக்கூட்டியக்கம் என்கிற இந்த அமைப்பு அரசுத்துறையிலும், தனியார் துறை
உள்பட அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழி உரியவாறு பயன்படுத்தப்படுவதற்கான
சட்டங்கள் இயற்றப்படுவதற்கும், திட்டங்கள் தீட்டப்படுவதற்கும், அதனுடைய
நடைமுறைகள் நிறைவேற்றப்படுவதற்குமான ஒரு முன்முயற்சி எடுத்து செய்யக்கூடிய
ஒரு அமைப்பாக, அதை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கக்கூடிய அமைப்பாக நாங்கள்
இருக்க விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் எதிர்த்துப் போராட வேண்டிய
நேரத்தில் எதிர்த்துப் போராடி, ஆக்கப்பூர்வமாக ஆலோசனை தரவேண்டிய நேரத்தில்
ஆலோசனையும் தந்து செயல்படக்கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான அமைப்பாகத்தான் இருக்க
விரும்புகிறோம். இது பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள், பல்வேறு இடதுசாரி
அமைப்புகள், தமிழின் மீது ஆர்வம் கொண்ட மற்ற அமைப்புகள் எல்லோரும் சேர்ந்து
உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பு என்பது பல்வேறு அரசியல்
அமைப்புகளின் கூட்டமைப்புதான். ஆனால் இதனுடைய நோக்கம் தமிழுக்கு சரியான
அரசியல் ரீதியான தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்பது. இந்த நோக்கத்தை
அடைவதற்கு நாங்கள் பல்வேறு விதமான வழிமுறைகளை யோசித்து வருகிறோம்.
எங்களுடைய பலத்தைப் பொறுத்து அவற்றை நாங்கள் ஒவ்வொன்றாக செய்வோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment