உலகநாடுகள்
தங்கள் குடிமக்களின் நலத்தையும், நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை
உயர்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க விரும்பும்
தலைவர்களும், மக்கள் எப்பொழுதும் கேட்கவிரும்பும் “உடல்நலம், பொருளாதாரம்,
மகிழ்ச்சி” (Health, Wealth, and Happiness) ஆகியவற்றை தங்கள் மக்களுக்கு
அளிப்பதே தாங்கள் பிறவி எடுத்ததன் நோக்கம் என்பது போன்றுதான் தேர்தல்
காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி பதவிக்கு வருகிறார்கள். அவ்வாறு
பதவிக்கு வந்தவர்கள் மக்களின் வாழ்வில், நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள்
அக்கறையைக் காட்டுகிறார்களா என்பதைப் பற்றி மக்களின் கருத்துகள் வேறுபடும்.
உலக மக்களின் நல்வாழ்வு நிலைமையை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை “காலப்
ஆய்வுகுழு”(The Gallup World Poll) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. சென்ற
ஆண்டு முதல் “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமைக் குறியீடு”(Global Well-Being
Index) பற்றிய ஆய்வுக்குழுவும், காலப் ஆய்வு குழுவும் இணைந்து “உலக
மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை” (The
Gallup-Healthways Global Well-Being Index – The State of Global
Well-Being Report) என்ற ஆண்டறிக்கைகளை வெளியிடத் துவங்கின. இந்த ஆண்டும்
இந்த ஆய்வுக் குழுக்கள் தயாரித்த, “2014 ஆம் ஆண்டில் உலக மக்களின்
நல்வாழ்வு நிலைமை” என்ற ஆய்வறிக்கை இந்த வாரம் (ஜூன் 23, 2015)
வெளிவந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற இருபெரும் ஆய்வுக்
குழுக்கள் இணைந்து அளிக்கும் உலகமக்களின் நலவாழ்வு அறிக்கை என்பதால்
பெரும்பான்மையான மக்களையும், நாட்டுத் தலைவர்களையும், ஊடகங்களையும் இந்த
ஆய்வறிக்கை வெளியீடு ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு
வெளியான “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை”
பற்றி சிறகு மின்னிதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு காணலாம் – http://siragu.com/?p=15120.
அனைத்துலக நாடுகளிலும் …
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment