சினேகா
மோகன்தாஸ். வயது 23 தான். காட்சி தொடர்பியல் (Visual Communication)
பட்டதாரி. மேற்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தலைமுறைகள் மத்தியில் சமூகச்சேவையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார். அவரது
பார்வையில் ஒரு சமூக அக்கறை தெரிகிறது. ‘உணவு வங்கி’ என்ற திட்டத்தைத்
தொடங்கி, சென்னையில் உணவின்றி சிரமப்படுபவர்களுக்கு மூன்று வேளை உணவு
வழங்கி அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்.. அவருடன் ஒரு சிறிய
நேர்க்காணல்:
‘உணவு வங்கி’ – எப்படி உதித்தது உங்கள் சிந்தனையில்?
சினேகா மோகன்தாஸ்:இந்திய
மக்கள் தொகையில் 15%-க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவித்து
வருகின்றனர். மூன்று வேளை உணவுக்கு வழியின்றி கூட பலர் தவித்து
வருகிறார்கள். சென்னை மாநகர சாலையோரங்களில் இப்படி உணவின்றி சிரமப்படும்
ஊனமுற்றோர், முதியவர்கள், ஆதரவற்றவர்களை எளிதாகக் காணலாம். இது எனது மனதில்
பெரும் சுமையை ஏற்படுத்தியது. இந்த அவலத்தை மாற்ற என்ன வழி என்று
யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘உணவு வங்கி’.
‘உணவு வங்கி’ செயல்பாடுகள் என்னென்ன?
சினேகா மோகன்தாஸ்:நண்பர்கள்,
உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் உணவு வங்கியின் தன்னார்வலர்களாக இணைந்து
உதவி புரிந்து வருகிறார்கள். உங்கள் வீடுகள், நிகழ்ச்சிகள், கூட்டங்களில்
உணவு மீதமிருந்தால் ( https://www.facebook.com/groups/1628237724087693/
) என்ற முகநூல் குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தப் பகுதிக்கு
அருகாமையில் இருக்கும் உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் வந்து உணவை
பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு சாலைகளில் உணவின்றி வாடுவோருக்கு வழங்கி
அவர்களின் பசியைப் போக்குவார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.