புலித்தேவர்
மேற்குத் தொடர்ச்சி மலையின் குகையில் இருந்துகொண்டு படைபலத்தினை
பெருக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் தனது கோட்டையை வெள்ளையர்களிடமிருந்து
கைப்பற்றிட தீவிரமாக செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார்.
புலித்தேவர் தனது ஒற்றர்களின் மூலம் வெள்ளையர்களின் செயல்பாடுகளை தீவிரமாக
கண்காணித்துக் கொண்டிருந்தார். குகையில் இருந்து கொண்டே நாட்டில் என்ன
நடக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் அறிந்து கொண்டார்.
வெள்ளையர்கள் தென்தமிழகத்தில் புலித்தேவரை
பிடித்துவிட்டால் போதும், மற்ற பாளையங்கள் அனைத்தையும் மிக எளிதாக வெற்றி
கொள்ள முடியும், நமக்கு இருக்கும் ஒரே முக்கியமான எதிரி புலித்தேவர்
மட்டும்தான் என்று அவரை கைது செய்திட மிகத் தீவிரமாக முயற்சி
செய்தனர்.புலித்தேவரின் கோட்டையைக் கைப்பற்றியதும், அவரது குடும்பம்
எங்குள்ளது என்பதை அறியாமல் தேடிக் கொண்டிருந்தனர் வெள்ளையர்கள். பின்னர்
அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து கொண்டதும், அவரது மனைவி மற்றும்
குழந்தைகள் குடிசையில் இருக்கும்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில்
குடிசைக்கு தீ வைத்து விட்டனர்.
புலித்தேவரின் படைகளில் இருந்த ஒரு தளபதி,
புலித்தேவரின் குடும்பத்தை ரகசியமாக பாதுகாத்துக் கொண்டிருந்தார். தீயில்
குடிசை முழுவதும் எரிந்துவிட்டது. இந்தத் தீயில் புலித்தேவரின் மனைவி
படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். அவரது குழந்தைகளை படைத்தளபதி
தீயிலிருந்து காப்பாற்றினார். இதில் மூத்த மகனை, பாஞ்சாலங்குறிச்சியைச்
சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா, தன்னுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு
அழைத்துச் சென்று வளர்த்தாகக் கூறப்படுகிறது. வெள்ளையர்கள் புலித்தேவரைக்
கண்டு மட்டும் அச்சம் அடையவில்லை, அவரது பரம்பரையில் ஒருவரும் இருக்கக்
கூடாது, அப்படி இருந்தால் அந்த வீரத்தின் இரத்தம் மீண்டும் தங்களைத்
தாக்கக் கூடும். எனவே புலித்தேவர் வாரிசு என்று எவரும் இருக்கக் கூடாது,
அவரது பரம்பரை முழுவதையும் அழித்தால்தான் தென்னகத்தில் தங்கமுடியும்,
நிம்மதியாக வரிவசூல் செய்யமுடியும் என்று நினைத்தனர். அவரது குடும்பத்தை
தீக்கு இரையாக்கிவிட்டு புலித்தேவரை மிகத் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர்.
ஆனால் புலித்தேவர் எங்கு உள்ளார் என்று வெள்ளையர்களினால் கண்டுபிடிக்க
முடியவில்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment