Sunday, 11 October 2015

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் வின்சென்ட் அவர்களின் நேர்காணல்- இறுதிப்பகுதி

Dr.S.Vincent
கேள்வி: காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன?
vincent nerkaanal1
பதில்: நான் முன்பு கூறியதுபோல் காட்டுயிர்கள் ஒரு குறியீடு. விலங்குகள் ஒவ்வொரு இடத்திற்கும் அதாவது தரையில் வாழுகிற விலங்குகள், நிலத்தில் வாழுகிற விலங்குகள், ஏன் ஆகாயத்தில்கூட பறந்து திரிகிற விலங்குகள் எல்லாம் குறியீடுகளாக இருக்கின்றன. ஒரே ஒரு உதாரணம் என்னவென்றால் வல்லூறு(vulture). இவை ஒரு உன்னதமான பணியை செய்கிறது. சில நேரங்களில் மக்கள் மத்தியில் இதைப்பற்றியான ஒரு தவறுதலான புரிதல் இருக்கிறது. அந்த வல்லூறுகளின் புனிதமான தன்மை என்னவென்றால், நிலத்திலோ அல்லது வனங்களிலோ இறந்து கிடக்கிற பொருட்களை விரைவாக சுத்திகரிக்கிற தன்மை இருக்கிறது. ஒரு காலத்தில், இறந்து கிடக்கிற ஒரு விலங்கை, நாம் சென்று வருவதற்குள் அதை இல்லாமல் செய்கிற ஒரு பெரிய திறன் அதாவது சுத்திகரிக்கிற திறன் வல்லூற்களுக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு அதனுடைய எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் இன்றைக்கு இறந்து கிடக்கிற விலங்குகளுடைய, மனிதர்களுடைய துர்நாற்றம் தெருக்களில் வருவதால், பல நோய்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது.

இன்று சார்ஸ் (sars) நோய் என்று சொல்கிறோம், இந்த சார்ஸை அழிக்கமுடியாததனால் தொற்றுநோயை உருவாகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வல்லூறு(vulture) அழிந்துவிட்டதற்குக் காரணம், நம்முடைய உணவுகளில் பூச்சிகொல்லி மருந்து கலந்துவிட்டதுதான். ஏனென்றால் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து தாவரங்களிலிருந்து, உணவாக விலங்குகளுக்கும் மனிதனுக்கும் செல்லுகிறபொழுது, அதை சாப்பிடுகிற வல்லூறுகள் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறது. அந்த இடத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் நஞ்சாக மாறியிருக்கிறது. இந்த மாதிரி இறந்து கிடக்கிற விலங்குகளை இயற்கையாகவே சாப்பிடுகிற, அந்த வல்லூறுகள் இன்றைக்கு மறைந்துவிட்டதனால், பெரிய தொற்று நோய்களை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம், இது ஒன்றே உதாரணம். அதனால்தான் இன்றும் காகங்களை இயற்கை தோட்டிகள் என்று சொல்கிறோம். ஆனால் அதற்கும் இந்த மாதிரி நிலைமை வந்துவிடுமோ என்கிற பயம் இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு உதாரணம், இதை வைத்து பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்த ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment