கண்ணகனார் என்ற புலவர் பாடியது.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிரை
மாய்த்துக் கொண்டபோது அவரோடு பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரும்
உயிர் துறந்தார். அதனைக் கண்ட புலவர்கள் வியந்து நின்றனர். வியப்பில்
இருந்த புலவர்களுக்கு விடை தந்தார், புலவர் கண்ணகனார்.
தங்கமானது, நிலத்தின் அடியிலிருந்து
கிடைப்பது; பவளம், காட்டிலே கிடைப்பது; முத்து, கடலிலே பிறப்பது. மணி,
மலையிலிருந்து பெறுவது. இவை அனைத்தும் தோன்றுமிடம் ஓரிடமல்ல… என்றாலும்,
அணிகலனாக அமைக்கின்றபோது ஒன்றிணைகின்றன. அதைப்போல்தான் மன்னனாக இருந்தால்
என்ன, புலவனாக இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன, இவையெல்லாம்
காரணங்கள் அல்ல… இங்கே, வேறோரு முக்கியமான பந்தம் இருக்கிறது. உயர்ந்தோர்
என்றும் உயர்ந்தோரோடுதான் இணைவர். அந்த இணைப்புத்தான் மன்னனையும்
புலவனையும் இணைத்தது என்கின்றார் புலவர். இதோ அவரின் புறநானூற்றுப் பாடல்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment