நீரின்றி
அமையாது உலகு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருவள்ளுவரின்
குறளை மட்டும் மாணவர்களுக்குப் பாடமாக வைத்துவிட்டு, அதை உணரவில்லை நமது
அரசு. எனவேதான், இயற்கை தமிழக அரசுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
மழையின் சிறப்பினை திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை, மாமழை போற்றுதும்,
மாமழை போற்றுதும் என மழையைப் போற்றி வணங்கித் தம் காப்பியத்தைத்
தொடங்கினார் இளங்கோவடிகள். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் மழையின்
அருமைபெருமைகளை உணர்ந்துள்ளோம். இந்த ஆண்டில் நமக்கு இயற்கை கொடுத்த
மழைநீரை வீணாக்கியதுதான் நாம் செய்த சாதனை. ஆய்வாளர்கள் நிலத்தடி நீர்
குறைந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என தமது அறிக்கையில்
வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை, அரசும்
மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
நமது
தமிழகத்தில் 13 ஆயிரத்து 799 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில்
உள்ளது. இதில் 10 ஆயிரத்து 64 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என
பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தனது ஆவண அறிக்கையில், சென்னையில் முன்பு
இருந்த ஏரிகள் இன்று காணவில்லை. ஆம், நுங்கம்பாக்கம் ஏரி, வள்ளுவர்
கோட்டம், நுங்கம்பாக்கத்தில் சில பகுதிகள், பனகல் மாளிகை, மாம்பலம் ஏரி,
மாம்பலம் பகுதியின் சில பகுதிகள், வேளச்சேரி ஏரி, 100 அடி சாலை, ரானே
கம்பெனி, ஃபீனிக்ஸ் மால், அல்லிக்குளம், நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகள், கோயம்பேடு ஏரி, கோயம்பேடு பேருந்து நிலையம்,
கோயம்பேடு சந்தை, மெட்ரோ ரயில் நிலையம், முகப்பேர் ஏரி, தமிழ்நாடு வீட்டு
வசதி வாரிய குடியிருப்பு, விருகம்பாக்கம் ஏரி, தமிழ்நாடு அரசு உயர்
அலுவலர்களுக்கான குடியிருப்பு மற்றும் இன்று கல்வித்துறையில் உயர்ந்த
நிலையில் உள்ள நிறுவனங்களின் ஏரி, பொத்தேரி முதலான பல ஏரிகள்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment