பழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான எல்லாத் தீவனங்களையும் கொடுத்து வளர்ப்பார்கள். அதை வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள் அதுவும் நன்கு ‘கொழு கொழு’ என்று வளரும். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் சிலர் இதேபோல் செய்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு பதிலாக அதேபோல பிள்ளைகளை வளர்க்கிறார்கள், பலி கொடுப்பதற்கு.
ஆம், உடல் பருமனால் அநேக நோய்கள் உண்டாகின்றன. ஆயுள்காலத்தை வெகுவாக குறைக்கும் காரணிகளில் உடல் பருமன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சிறுவயதில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அப்படியே வாலிப வயதிலும் வளர்கிறார்கள், நடுத்தர வயதிலும் வாழ்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் நூலகத்தை விட உணவகத்திலேயே இவர்களை அடிக்கடி பார்க்க முடியும்.
உடல் பருமன் கிட்டத்தட்ட எல்லா நோய்களோடும் தொடர்புடையது.
இப்படிச் சொன்ன உடனேயே, உங்கள் மனதில் எழுகின்றவைகள். “டாக்டர், என் மகன்/மகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?” இப்போது இருக்கும் எடை சரிதானா, அதிகமா? என்பதுதான். இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு பதில் காண்பதற்கு முன்பாக, சில வாழ்வியல் புரிதல்கள் நமக்கு வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment