வேர்க்கடலை
மனித வளர்ச்சிக்கு உதவும் ஒரு சத்தான தாவரம் என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனால் சாதாரணமாக நாம் வேர்க்கடலைக்கு, இல்லை கடலை என்ற வார்த்தையை வேறு
ஒன்றுக்கு பயன்படுத்தும் காலத்தில் இருக்கிறோம். இரு ஆண்கள் பேசிக்கொண்டால்
பேசுகிறார்கள் என்போம், ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தால்
கடலை போடுகிறார்கள் என்கிறோம். மகாத்மா காந்தி ஆட்டுப்பாலும், கடலையும்
உண்டே அதிக நாள் வாழ்ந்தார் என்ற வரலாறும் படித்திருக்கிறோம். இந்த
வேர்க்கடலையில் அப்படி என்னதான் உள்ளது என இனி காண்போம்.
தமிழகத்தில் நிலக்கடலை கோடை பருவத்தில்
சூன், சூலை மாதங்களிலும், கார்த்திகை பட்டத்திலும், நவம்பர், டிசம்பர்
மாதங்களிலும் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான செம்மண் பாங்கான காற்றோட்டமும்,
வடிகால் வசதி உடைய நிலமுள்ள இடத்தில் தான் கடலை நன்கு வளரும். தமிழகத்தில்
தென் மாவட்டங்களில் களிமண் பகுதிகளிலும் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. கடலை
விதையை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்கள் கழித்து
உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். நிலக்கடலைத் தாவரத்தில் பக்கக்கிளைகள்
தோன்றும் போது 2 முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
இக்கடலையை
இலைச் சுருட்டுப்புழு தாக்கும். இதன் தாக்குதலில் இருந்து பயிரைக் காக்க
வேப்பங்கொட்டைச் சாற்றினை 5 சதவிகிதம் தயாரித்து தெளித்தால்
இலைச்சுருட்டுப் புழு மடிவதோடு, பயிறுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது.
இதற்காக தமிழக அரசு ஜிப்சம் உரங்களை மானிய விலையில் கொடுத்து வருவது
கூடுதல் தகவலாகும்.
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment