பாரதி
வறுமையில் வாடிய போதிலும் வீட்டை மறந்து நாட்டையே நினைத்து வாழ்ந்தவர்.
இவரது ஆற்றல் கவிதையில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், அரசியல், ஆன்மிகம்,
அறிவியல், பெண்கள் முன்னேற்றம், கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு,
தொழில்முறை, மருத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். இப்பாரதியின்
பல்நோக்குப் பார்வைகளில் நாம் பாரதியின் அறிவியல் நோக்கையும் அதன்மீது
அவரது பார்வையின் பிரசுரங்களையும் கண்டுணரலாம்.
பாரதியின் குழந்தைப் பற்று
குழந்தைகளை ‘ராஜா’ வென்றே கூப்பிடுவார்.
நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். சொல்வதையே செய்யுங்கள் என்பார் பாரதி.
அதாவது தாம் செய்வதில் ஏதாவது கெடுதலிருக்கும். சொல்வதில் இராது என்பதே
அர்த்தம். குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது, குழந்தைகளுக்குப் பருவத்திலேயே
பயமுறுத்தி விட்டால் பிறகு அடிமை உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும் என்பார்.
பூனை என்று யாராவது குழந்தைகளைப்
பயமுறுத்தினால் அவர்களைக் கோபிப்பார். குழந்தைகளைக் கூப்பிட்டுப்
பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ‘பூனையும் இல்லை, பயமும் இல்லை’ என்று
சொல்லித் தருவார். பாரதி ராத்திரி வேளையில் குழந்தைகள் மலஜலம் கழிக்க
வேண்டும் என்றால் துணையில்லாமல் தனியாகப் போகும்படிச் சொல்வார். தாம் கூடவே
இருப்பதாக நினைத்துத் தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றும், இருளைக் கண்டு
பயப்படக்கூடாது என்றும் சொல்லித் தருவார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment