உங்களில்
பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து
அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான
ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில்
துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும்
காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும்
இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.
இவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா?
திடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத
விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால்
உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.
இருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை
எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல்,
அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை,
அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின் மற்றும் ஊழியர்களின்
பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment