ஆணும்
பெண்ணும் சிந்திப்பதில் மாறுபட்டவர்கள், ஒரு நிலைமையைக் கையாளுவதிலும்
அவர்களிடம் வேறுபாடுகள் உண்டு என்று காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
ஆணுக்குத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ, தனது உணர்வுகளை வார்த்தைகளில்
விவரிக்கவோ பெண்களைப் போல இயலுவதில்லை; தகவல்களை நினைவு கூர்வதிலும்
பெண்கள் வல்லவர்கள் எனப் பெண்களின் குணநலன்களும், பழக்க வழக்கங்களும்
பொதுமைப்படுத்தப்படுகிறது. பெண்ணின் இத்தகைய பண்புகளுக்குக் காரணம்
அவர்களது மூளையில் நினைவுகளைத் தொகுக்கும் “ஹிப்போகேம்பஸ்” பகுதியின் அளவு
ஆண்களைவிட அளவில் பெரிதாக இருக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு,
ஆண் பெண் மூளைகளின் “வடிவமைப்பில்” வேறுபாடுகள் உள்ளனவா என்றும் ஆய்வுகள்
பல நடத்தப்பட்டதுண்டு.
இது
போன்றே, ஆண்களும் பெண்களும் அடிப்படையில் ஒரு சூழ்நிலைக்கு
எதிர்வினையாற்றுவதில் வேறுபட்டவர்கள் என்றும், “உளவியல் அடிப்படையில்”
அவர்கள் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள் போன்று நடந்து கொள்வதாகவும்
குறிப்பிடப்படுவதுண்டு. ஜான் க்ரே என்பவர் எழுதிய, ‘மென் ஆர் ஃப்ரம்
மார்ஸ், விமென் ஆர் ஃப்ரம் வீனஸ்’ (Men Are From Mars, Women Are From
Venus, John Gray) என்ற நூல் ஆண் பெண் இருபாலரது செயல்பாடுகளையும் விளக்க
முற்பட்டது. தங்கள் துணைகளின் சிந்தனைப் போக்கை அறிய விரும்பியவர்களும்,
அவர்களது மனதில் இடம்பிடிக்க விரும்பிய இருபாலரும் போட்டி போட்டுக் கொண்டு
இந்த நூலைப் படிக்க விரும்பியதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இந்த
நூல் விற்பனையானது. இந்த முயற்சியின் விளைவாக எத்தனை மணவிலக்குகள்
தவிர்க்கப்பட்டன என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment