அப்போது
நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில்
இருந்தது. பக்கத்து வீட்டுக்கு நகரத்திலிருந்து தனது அம்மாவைப் பார்க்க
அவரது மகன் வருவார். வரும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் அவர் வருவார்.
என்மேல் தனது அக்கறையைக் காட்டுவதற்காக என் அப்பா முன்னிலையில் எதையாவது
ஒன்றைச் சொல்லி அதற்கு இங்கிலீஸில் என்ன? இதற்கு இங்கிலீஸில் என்ன? என்று
கேட்பார். வாட் இஸ் யுவர் நேம்? என்ற கேள்வியைத் தவிர பெரும்பாலான
கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது.
அழைத்துக்கொண்டு எங்களது வீட்டுக்கு
வந்தார். வழக்கம் போல அன்றும் நான் மாட்டிக்கொண்டேன். அவரது புதல்வி
முன்னிலையில் ‘காண்டாமிருகத்திற்கு’ இங்கிலீஸில் பெயர் என்ன? என்று
கேட்டார். நான் திருதிருவென விழித்தேன். உடனே, நீர்யானைக்கு இங்கிலீஸில்
என்ன? என்று அடுத்து கேட்டார். அதற்கும் நான் விழித்தேன். அதே கேள்வியைத்
தனது மகளிடம் கேட்டார். அவர் மகள் உடனே அதற்கு பதில் சொன்னாள். இவனை
இதுக்குத்தான் இங்கிலீஸ் டியூசன் அனுப்புங்கிறேன் என்றால் கேட்க
மாட்டிங்கிறீங்களே அண்ணே’ என்று படிக்காத என் தந்தையிடம் அலுத்துக்
கொண்டார். என் வயதுடைய பெண்பிள்ளை முன் அவமானப்பட நேர்ந்ததை எண்ணி நான்
கூனிக் குறுகி அழுதே விட்டேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
இதற்கு முன் காண்டாமிருகத்திற்கு ரைனோசரஸ்
என்பதும் நீர் யானைக்கு ஹிப்போபொடமஸ் என்பதும் எனக்குத் தெரியாது. அந்த
வார்த்தையையே நான் கேட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் காண்டாமிருகம் என்ற
சொல் கூட எனக்குப் புதிது தான். இந்த சம்பவம் நடந்து முப்பது
வருடத்திற்கும் மேலாகி விட்டது. சரி. அதை எதற்கு உங்களுக்கு இப்பொழுது
சொல்கிறேன்? என்று கேட்கிறீர்களா?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment