இப்போது தமிழகம் சந்திக்கும் பல்வேறு
அரசியல் சூழல்களில், இதுவும்கடந்து போகும் என்று நம்மால் எளிதாகக் கடக்க
முடியாத ஒரு கொடுமையான மனவேதனை ஒன்று இருக்கிறதென்றால், அது குழந்தை
ஹாசினியின் மன்னிக்கவே முடியாத படுகொலை.!
அரியலூர் மாவட்டத்தில் சிறுமி நந்தினியின்
கொடூர படுகொலை நடந்த ஒருமாத காலத்திற்குள், மீண்டும் கடந்த வாரத்தில், ஒரு
ஏழு வயது குழந்தைக்கு இந்தக் கொடுமை நடந்தேறி இருக்கிறது என்பது, நம்
சமூகம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான சான்றாக இருக்கிறது.
பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்யப்படவில்லை என்றால்,
நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது முன்னேற்றமாகாது… வாழ்வியலில்
பின்தங்கி தான் இருக்கிறோமென்று பொருள்.!
நம்நாட்டில், பெண் குழந்தைகள் முதல்
மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை, பலாத்காரங்களுக்கு
ஆளாக்கப்படுகின்றனர் என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை.
பெண்களைப் பற்றி சரியான புரிதலை ஆண் பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க
தவறி விட்டோமென்று தான் தோன்றுகிறது. முதல் ஆசிரியர்களாக பெற்றோர்கள் தான்
இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டிய கட்டாயம்
இப்போது இருக்கிறது.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment