“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”
“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”
என்பார் இளங்கோவடிகள். இதன் மூலம்
வடக்கில் திருவேங்கடம் முதல், தெற்கில் குமரிமுனை வரை, கிழக்கிலும்
மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு திகழ்ந்த நிலம் தமிழ் பேசும் தமிழ்நாடாக
இருந்ததை அறிகிறோம். அவ்வாறே இந்த எல்லைகளுக்குட்பட்டத் தமிழ் மண்ணை ஆட்சி
செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களின்
எல்லைகள் குறித்தும் பாடல்கள் உள்ளன.
தமிழகத்தின்
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த, அவர்களது நாடுகளின்
எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் என கம்பர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டு
நான்கு தனிப்பாடல்கள் ‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற நூலில் (பக்கம் 124-126)
இடம் பெற்றுள்ளன. தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), என்ற இந்த நூல், பல
புலவர்கள் எழுதிய தனிப்பாடல்களைத் தொகுத்து, 1908 ஆம் ஆண்டு கா. இராமசாமி
நாயுடு அவர்கள் வெளியிட்ட நூல். இந்நூலில் காளமேகப்புலவர் முதற்கொண்டு,
கம்பர் உட்பட 29 புலவர்கள் இயற்றிய சுமார் 750 தனிப்பாடல்கள் கா. இராமசாமி
நாயுடு அவர்களால் தொகுத்து உரை எழுதப்பட்டு பார்த்தசாரதி நாயுடு அவர்களால்
வெளியிடப்பட்டுள்ளது.
‘தனிப்பாடற்றிரட்டு’
நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் 69.
கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழமன்னனின்
அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘ஒட்டக்கூத்தர்’,
நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன்
போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய
பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இக்குறிப்புகள் இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன. எனினும்
எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய
கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது. மேலும் இடைக்காலச்
சோழர்கள் காலத்திலேயே, அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவர் ஆட்சி முடிவு
பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம்.
சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம்.
ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக்
கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன்
காலம் எனக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில்
சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களின் நாடுகளின்
எல்லைப்பகுதிகள் ‘தமிழகத்தின் இயற்கை அமைப்பு’ அடிப்படையில் இயற்கையாக
அமைந்த நில எல்லைகளான ‘மலைத்தொடர்கள்,’ ‘ஆறுகள்,’ ‘கடல்கள்’ போன்றவற்றால்
வரையறுக்கப்பட்டோ அல்லது ‘பெருவழிகள்,’ ‘ஊர்கள்’ ஆகியவற்றை எல்லைகளாகக்
கொண்டோ அமைந்திருப்பதை நிலவரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.
சுருக்கமாக, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment