ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று
இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில்
பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர்.
அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது.
அதில்தளும்பத் தளும்பத் தண்ணீர் கட்டி கிடந்தது. தடாகத்தில் தாமரை
மலர்களும் அல்லிமலர்களும் நிறையப் பூத்துக் கிடந்தன. தடாகத்தில் அன்னம்
ஒன்று வசித்து வந்தது. அது பூக்களோடு உறவாடிக் கொண்டும், சுவைமிகு
தடாகநீரைப் பருகிக் கொண்டும், ஆடியும் பாடியும் மகிழ்ச்சியுடன் இருந்து
வந்தது. சர்ப்பம் அன்னத்தின் வாழ்க்கையோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப்
பார்த்தது. அன்னத்திற்குத்தான் எத்தனை சொகுசான வாழ்க்கை? அன்னத்தை யாரும்
எந்தத் தொந்தரவும் செய்வது இல்லை. ஆனால் சர்ப்பத்தைக் கண்டாலே கல்லெறிந்து
கொல்ல வருகிறார்கள். சர்ப்பத்திற்கு அன்னத்தின் மீது பொறாமை வந்தது.
அன்னத்தை காணும்போதெல்லாம் அதன் பொறாமைத் தீ வளர்ந்தது. அன்னத்தின்
மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என சர்ப்பம் நினைத்தது. அதற்கு ஓரேவழி
உறவாடிக் கெடுப்பதுதான் என முடிவு செய்தது.
தடாகத்தில் அன்னம் வசித்து வருவது
சர்ப்பத்திற்குத் தெரியும். ஆனால் குளத்தில் சர்ப்பம் இருப்பது
அன்னத்திற்குத் தெரியாது. ஒருநாள் அன்னம் குளக்கரையில் வந்தமர்ந்தது.
அப்போது சர்ப்பம் அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தது. சர்ப்பத்தை கண்டதும்
அன்னம் அஞ்சி பின்வாங்கியது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment