மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை
இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய்
சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சில
வருடங்களுக்கு முன் முன்னாள் தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் ‘மூவலூர்
ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற
திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். இவரின் புகழை பறைசாற்றும் விதமாகவே
அந்தத் திட்டத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று
மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.
‘தேவதாசி’ என்னும் முறை, தமிழகத்தில்
சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த
பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற
பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டு, அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின்
ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும்
ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’
‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும்
வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து,
அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள். உடலை விற்கும் தொழிலை
அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பெயரால் புனிதப்
போர்வை போர்த்தினர் சனாதனம் பேசும் உயர்சாதியினர். இந்த அவலம் பல
நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment