இந்திய மெய்ப்பொருளியல் பெரும்பரப்பு
கொண்டது. பல்வேறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கியது. வேத மரபும், வேத மறுப்பு
மரபும் இந்திய மெய்ப்பொருளியலின் முரண். அல்லது இணை வளர்ச்சி என்றே
கொள்ளவேண்டும். ஆசீவகம், சமணம், பௌத்தம், பூதவாதம் போன்றன வேதமரபினை மறுத்த
இந்திய மெய்ப்பொருளியல் தத்துவங்கள் ஆகும்.
இவற்றில் அசீவகம் தமிழகத்தின் தொன்மைச் சமயமாகக் கருதத்தக்கது. இந்திய அளவில் பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கை பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கையை வகுத்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் முடிவு. பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்டு உருவாக்கப்பெற்றது அசீவகம் ஆகும்.
ஆசீவகத்தில் நிறக் கோட்பாடு
அடிப்படையானது. அறுவகையான நிறக்கோட்பாடுகளை இது கற்பிக்கிறது. ஆசீவகத்தில்
ஆன்ம ஈடேற்றம் கருதி மனிதர்தம் மெய்யியல் படிநிலைக்கு ஏற்ப வண்ண உடைகள்
வழங்கப்பெறும். ஞானவளர்ச்சியின் குறியீடாக வண்ணங்கள் இச்சமயத்தில்
கொள்ளப்பெறுகின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment