கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை சங்க
இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எனினும் சங்ககால இலக்கியங்கள் மற்றும்
அதற்கு பிற்பட்ட காலத்திலும் கல்வியின் நிலை அறிந்து கொள்ள நாம் அவற்றை
ஆய்வு செய்வது என்பது வேண்டியதாகிறது. மேலும் தற்காலத்தில் கல்வியின் நிலை
என்ன என்பதனை நாம் அறிந்துகொள்ளவும் வேண்டியதாகிறது.
கல்வியே செல்வம்:
உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி
வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட
கல்வியைத்தான் செல்வம் என்று,
“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
என ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய
செல்வங்களில் முதன்மையான செல்வம் என்று குறிப்பிடுகிறார். மேலும்
பெற்றோர்களது கடமையாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment